23
31. பந்தெறிவதற்காக ஓடிப்பார்க்கும் (Trial Run-up) பயிற்சியையாவது செய்து பார்க்கலாமா?
'ஆடத் தொடங்குங்கள்' என்று நடுவர் ஆணையிட்டபிறகு ஒரு பந்தெறியும் ஆட்டக்காரர், சோதனைக்காக ஓடிப் பார்க்கக் கூடாது. பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழந்து வெளியேறுகின்ற நேரத்தில், பயிற்சிக்காக ஓடிப் பார்க்க நடுவரிடம் அனுமதி பெறவேண்டும். அவர் அவ்வாறு ஓடிப் பார்ப்பதால், நேரம் ஒன்றும் வீணாகிப் போய் விடவில்லை என்பதை உணர்ந்து நடுவர் திருப்தியுற்றால், அவர் அனுமதித்த பிறகே, ஓடிப்பார்க்கலாம்
32. மதிய உணவு அல்லது சிற்றுண்டி நேரத்திற்கு 2 நிமிடத்திற்கு முன்பு, கடைசிப் பந்தடி ஆட்டக்காரர் (Last Fatman) ஆட்டமிழக்கிறார் என்றால் எப்படி ஆட்டத்தைத் தொடரவேண்டும்?
அந்த முறை ஆட்டத்தை அதோடு நிறுத்தி விட்டு வருகிற இடைவேளை நேரத்திற்குரிய நேரத்திற்கு 2 நிமிடத்திற்கு முன்னதாக ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். (அதாவது இடைவேளை நேரம் 40 அல்லது 20 நிமிடம் என்றால், ஆட்டடத்தை முடித்த நேரத்திலிருந்து 40 அல்லது 20 நிமிடம் என்று கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.)
33. பந்தெறி தவணை (Over) என்றால் என்ன என்பதை விவரி?
பந்தெறி தவணை என்பது, ஒரு பந்தெறி ஆட்டக்காரர் ஒரு விக்கெட் புறத்திலிருந்து, மறுபுறம் உள்ள விக்கெட்டைக் காத்து நிற்கும் எதிர்க்-