33
50. ஒரு பந்தெறியாளர் பந்தெறிகிறார். அது (தவறுதலாக ) வேகமாக வராமல், வந்து மெதுவாக பந்தடி ஆட்டக்காரர் முன்பாகக் கிடக்கிறது. அப்பொழுது அதை எட்டாத பந்தெறி என்று சொல்லலாமா?
அதை ‘எட்டாத பந்தெறி’ என்று சொல்ல முடியாது. சரியான பந்தெறி என்றேதான் (நடுவரின் கருத்துப்படி) ஆட வேண்டும்.
51. அந்தப் பந்தை எப்படி அடித்தாட முடியும்? அல்லது மீண்டும் ஒரு முறை பந்தெறியச் செய்துதான் ஆட வேண்டுமா?
எட்டாத பந்தெறி என்றோ, அதற்காக ஒரு ‘ஓட்டம்’ என்றோ கூறமுடியாத அளவில், அவர் முன்னே வந்து அசைவற்றுக் கிடக்கின்ற பந்தை, அப்படியே வேகமாக அடித்தாடி, வழக்கம் போல ‘ஓட்டங்கள்’ எடுக்க, அந்த அடித்தாடும் ஆட்டக் காரருக்கு (Striker) உரிமை உண்டு.
52 தடுத்தாடும் ஆட்டக்காரரில் ஒருவர் வந்து, பந்தை அடிப்பதற்குமுன் எடுத்துவிட்டால் என்ன செய்வது?
அசைவற்றுக் கிடக்கும் பந்தை, அவர் அடித்து ஆடிடத்தான் வேண்டும் அதுவும், தடுத்தாடும் குழுவினரின் இடையீடு எதுவும் இல்லாமல் ஆடவேண்டும். தடுத்தாடும் குழுவினர் அவரை அடித்தாட விடாமல் குறுக்கிட்டால், மீண்டும் அந்தப் பந்தை அதே இடத்தில் வைக்கச் செய்து, தடுத்தாவோரை அவரவர் நின்று கொண்டிருந்த இடங்களுக்குப் போகச்-
கிரிக்-3