உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

லிருக்கும் போது, எல்லைக்கு வெளியே வராமல் இருந்துதான் ஆடவேண்டும்.

65 பந்தெறியால் விக்கெட் விழுதல் (Bowled) என்றால் என்ன?

பந்தெறியாளரால் எறியப்படும் பந்தானது, நேராகச் சென்று விக்கெட் மீது பட்டு, விக்கெட் விழுந்தாலும், அல்லது பந்தடி ஆட்டக்காரர் உடல்மீது அல்லது மட்டை மீது முதலில் பட்டு, அதற்குப் பிறகு விக்கெட்மீது விழுந்தாலும், அல்லது பந்தை ஆடிய பிறகு பந்தைக் காலால் உதைத்தோ அல்லது அடித்தோ அதனால் விக்கெட் விழுந்தாலும் அது பந்தெறியால் விக்கெட் விழுந்தது என்றே கொள்ளப்படும்.

66 பந்தை உயரே அடித்து ‘பிடி கொடுத்தல்’ (Catch) என்பதை விளக்குக?

அடித்தாடுவோரால் (Batsman) அடிக்கப்பட்டு உயரே கிளம்பிய பந்து, அல்லது அவரது பந்தாடும் மட்டையைப் பிடித்திருக்கும் கைகளின் உறைமீது பட்டுவரும் பந்தானது, தரையில் விழுவதற்குமுன் பிடிபட்டுவிட்டால், அது பிடித்தது (Catch) என்றே நடுவரால் ஏற்றுக் கொள்ளப்படும்.

பிடிக்கும் பொழுது ஒரு கையால் அல்லது இரு கைகளால் பந்தைப் பிடிக்கலாம். அல்லது உடலோடு சேர்த்தணைத்துக்கொண்டு பந்தைப் பிடிக்கலாம். அல்லது தற்செயலாக உடையில் விழுந்து சிக்கிக் கொண்டாலும், அதுவும் பந்தைப் பிடித்தது என்றே கருதப்படும்.

67. இப்படி உயரே வரும் பந்தைப் பிடித்திட, ஏதாவது விதிமுறைகள் இருக்கின்றனவா?