41
நிச்சயமாக உண்டு. அத்தகைய விதிமுறைகளை மீறாமல் அந்த ஆட்டக்காரர் பிடிக்கின்றாரா என்பதிலும் நடுவர்கள் அதிகக் கவனம் செலுத்துவார்கள்.
1. பந்தைப் பிடிக்கின்ற தடுத்தாடும் ஆட்டக்காரர் ஒருவர், தான் பந்தைப் பிடிக்கும் பொழுது ஆடுகள மைதான எல்லைக்குள்ளே தான் (கட்டாயமாக) இருக்க வேண்டும்.
2. கீழே விழுந்து பந்தைப் பிடிக்கும்போது கைகள் தரையில் இருந்தாலும், பந்தானது தரையைத் தொடாதவாறு இருக்கவேண்டும்.
3. ஒரு தடுத்தாடும் ஆட்டக்காரரின் உடையில் அவர் பிடிக்காமல் இருக்கும் பொழுதும் பந்து வந்து விழுந்தால், பந்து பிடிப்பட்டது என்று சொல்வது போலவே, விக்கெட் காப்பாளருடைய காலுறைகளுக்குள்ளே பந்து சென்று தேங்கிக் கொண்டாலும், பந்தைப் ‘பிடித்தது’ என்றே ஏற்றுக் கொள்ளப்படும்.
4 ஆடுகள மைதானத்தின் எல்லைக் கோட்டைக் கடந்து போகின்ற பந்தை, ஆடுகள எல்லைக்குள் நின்று கொண்டிருக்கும் ஒரு ஆட்டக்காரர், கையை வெளியே நீட்டி பந்தைப் பிடித்து விட்டால் அதுவும் சரி என்றே ஏற்றுக்கொள்ளப்படும்.
5. மைதானம் எந்தவிதத் தடையுமில்லாமல் (Obstruction) தான் இருக்கவேண்டும். அப்படி முதலில் இல்லாமல் இருந்து, பிறகு ஆட்டம் தொடங்கியவுடன் ஏதாவது தடைகள் நேர்ந்து, அதனால் பந்து உயரே பிடிப்பட்டுப்போனால், அது ‘சரியானதே’ என்று ஏற்றுக் கொள்ளப்பட, அடித்தாடியவர் ஆட்டமிழக்க நேரிடும்.