43
தான் அடித்தாடிய பந்தானது முன்னேயோ பக்கவாட்டிலோ போகாமல், தான் காத்து நிற்கும் விக்கெட்டை நோக்கி வரும்பொழுது தனது விக்கெட் வீழ்த்தப்படாமல் தடுப்பதற்காக, அவர் தடுத்து நிறுத்தலாம். அப்படி நிறுத்தும்பொழுது தனது பந்தாடும் மட்டை அல்லது உடல் பகுதியால் வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் எக் காரணத்தை முன்னிட்டும் தனது கைகளைப் பயன்படுத்தக்கூடாது.
அடுத்ததாக, ஒருவர் முதல் முறையாக அடித்தாடிய பந்தானது, மேலே உயரத்திற்குச் சென்று, கீழே வந்து தரையைத் தொடுவதற்குமுன், இரண்டாவது முறையாக அடித்தாட அனுமதி உண்டு. அது தவறில்லை. அதனால், ஆட்டமிழக்கின்ற வாய்ப்பும் இல்லை.
70. அவர் இரண்டு முறை பந்தாடினார் என்று எவ்வாறு தீர்மானிப்பது?
அவர் விதிகளுக்கு உட்பட்டுத்தான், இரண்டாம் முறையாகப் பந்தை அடித்தாடினாரா இல்லையா என்பதை நடுவரே தீர்மானித்து முடிவு செய்ய வேண்டும்.
இரண்டாவது தடவை அவர் அடித்தது, 'ஓட்டம்' எடுக்க முயல்வதற்காகவா அல்லது தற்காப்புக்காகவா என்பதிலிருந்துதான் அவர் கணிக்க முடியும்.
71. இருமுறை அடித்தாடினால், 'ஓட்டம்' ஓடி பெற முடியுமா?
இதனால் ஓடி 'ஓட்டம்' எதுவும் எடுக்க முடியாது. ஆனால், 'வீண் எறி' (Over Throw)