4
பெற்றிருந்த அன்று, சவால் விடுவது போல், ஒரு சிலர் கேட்ட கேள்விக்குப் பதிலாகவே, கிரிக்கெட் பற்றிய திசையில் எனது முயற்சி புகுந்து கிளைத்தெழத் தொடங்கியது.
அதன் பயனாக முளைத்த முதல் நூல்தான் கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில். அடுத்து வரவிருக்கின்ற நூல்கள் கிரிக்கெட் ஆட்டத்தின் கதை, கிரிக்கெட் விளையாடுவது எப்படி என்பனவாகும்.
விரல் விட்டு எண்ணிவிடுகின்ற அளவு குறைந்த எண்ணிக்கையில் அமைந்த நாடுகளில் ஆடப்பெறுகின்ற ஆட்டமாகக் கிரிக்கெட் இருந்தாலும், கோடிக்கணக்கான மக்களை குதூகலத்தோடு, வெயிலிலும் பனியிலும் குளிரிலும் நாள் கணக்காக அமரச் செய்து ஆனந்தமடையச் செய்கின்ற அற்புத ஆற்றல் படைத்ததாகவே கிரிக்கெட் விளங்குகிறது.
சிறுவர்கள் முதல் வயோதிகர்கள் வரை கிரிக்கெட்பற்றி பேசியே இன்பம் அடைவதைப் பார்த்திருக்கிறோம். வானொலிப் பெட்டியை வட்டமிட்டு அமர்ந்து, தொலைதூரத்துச் செய்திக்காக உடல்வலி ஏற்பட்டாலும் பொருட்படுத்தாது. கேட்டு மகிழ்கின்ற நிலையையும் நாம் கண்டிருக்கிறோம்.
ஆடுவதைக் காட்டிலும், ஆடுவதைப் பார்ப்பதைக் காட்டிலும், ஆட்டத்தைப்பற்றி பேசிப் பேசி மகிழ்கின்றவர்களை நிறைய ரசிகர்களாக வைத்திருக்கின்ற கிரிக்கெட் ஆட்டத்தின் விதிமுறைகளை, மேலும் விளக்கமுறத் தெரிந்துகொண்டால், அவர்கள் பேச்சில் செழுமை இருக்கும். ஆட்டத்தில் முழுமை இருக்கும் என்று நினைத்தேன்.
அந்த நினைவுக்கு உருவமாகவே இந்த நூலை எழுதி இருக்கிறேன். விளையாட்டு பற்றிய சொற்களை ஆங்கிலத்திலேயே கேட்டுக் கேட்டு, பேசிப் பேசிப் பழகிப்போனவர் களிடையே தமிழில் புதிய கலைச் சொற்களைப் புகுத்தி