உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குப்பைமேடு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு

15

அந்தக் குப்பைமேடு என்னை இழுத்தது. கண்ணியம் அங்கு இன்னியமாக ஒலிப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். அது எனக்குக் கதைக்குத் தலைப்பைத் தந்தது.

'மேலிடத்துக்கு எழுதிப் போடுங்கள், அவர்கள் எடுத்துப் போடச் சொன்னால் நகர்த்தித் தரக் காத்துக் கிடக்கிறோம்' என்று கூறிவிட்டு அங்குக் குவிந்து கிடந்த குப்பையைக் கூடையில் வாரி எடுத்து வண்டியில்

கொட்டிச் சென்றான்.

-3

காலம் மாறிவருகிறது. பெண்கள் போலீசு உடை தரித்திருக்கிறார்கள். தடி எடுத்துத் தாக்கும் தண்டனை வேலைக்கு அவர்களை ஆளாக்குகிறார்கள். பெண்கள் கையில் ஆண்கள் அடிவாங்கும் புதுயுகம் பிறந்துவிட்டது. பழிவாங்கும் படலத்தைக் கண்டு பழகிய நமக்கு இன்று காணும் காட்சி அதி அற்புதமாக இருந்தது. தெருவில் தினம் பார்த்துக் கொண்டிருப்பேனே அந்தத் திரு கையில் துடைப்பம் ஏந்தித் தெரு பெருக்கினாள். படம் எடுக்கி றார்கள் என்று நினைத்தேன். சுகாதாரப் பெண் மந்திரி பத்திரிகைக்குப் படம் தருகிறார் என்று நினைத்தேன். பிலிப்ஸ் மன்னர் டாக்சி டிரைவராகப் பணி செய்ய முடிவு செய்தததாகச் செய்தி வருகிறது. இது பிரிட்டனில் இருந்து வந்த புதிய செய்தி. படித்தவள் ஒருத்தி குப்பை பெருக் கினாள். அதனால் அவள் கதாபாத்திரம் ஆகிறாள். ஏன் இவள் இந்தத் தொழிலுக்கு வந்தாள்? இவள் செய்கை அசட்டுத்தனமாகத் தான் பட்டது. ஏதோ கிறுக்கு என்று தான் நினைத்தேன். இவளை "அசடு என்று ஏன் கூறக் கூடாது? அந்தவீட்டு முசுடு'வுக்கு இந்த அசடு கண்ணில் படுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/17&oldid=1112717" இலிருந்து மீள்விக்கப்பட்டது