உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குப்பைமேடு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

ராசீ

'சந்திப்புகளில் ஏற்படுகிறது' என்று விளக்கினாள்.

'நீங்கள் எப்படிப் பிழை இல்லாமல் எழுதுகிறீர்?" என்று கேட்டாள்.

'பழக்கம்தான்; எழுதி எழுதிப் பழக்கம்; கொஞ்சம் மொழிப் புலமையும் தேவைப்படுகிறது' என்றேன்.

'இந்த ஒற்றுப்பிழைகளை மட்டும் திருத்திக் கொடுங் கள்' என்று என்னிடம் தன் கரம் நீட்டினாள். அதை ஒரு வரமாகக் கொண்டேன். அது சுரமாக மாறியது. தரமான காதலாக வளர்ந்தது.

அந்த அச்சகத்துக்குப் பிழை திருத்த அடிக்கடி சென் றேன். இல்லாத பிழை கூட தேடிப்பிடிக்கச் சென்றேன். அவள் அச்சிடும் காலங்களில் என் நூல்களும் அங்கு அச்சு ஏறின. அதனால் நெருக்கடியும் ஏற்பட்டது; அடிக்கடி சந்தித்தோம்.

'உம் கணவரை ஏன் நிராகரித்தீர்' என்றேன்.

‘'எதுகை மோனை சரி இல்லை என்றால் கவிதையில் நயம் இருப்பது இல்லை' என்றாள்.

"புதுக்கவிதைக்கு அது தேவை இல்லையே'

'அதற்கு இயைபு தேவை ஆகிறது. ஒசை அழகு துல்லி யமாக இருக்கும்' என்றாள்.

"நான் கேட்ட வினா வுக்கு விடை?”

"இயைபு இன்மை' என்றாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/46&oldid=1113136" இலிருந்து மீள்விக்கப்பட்டது