உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குப்பைமேடு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

 ராசீயினுடைய இந்நாவலில் அவரது இலக்கிய நடையும், தெள்ளுதமிழ் ஞானமும், தானே துள்ளிவரும் எதுகையும் மோனையும், அபாரமான கற்பனா ஒப்பீடுகளும் ரசிக்கத்தக்கவையாக அமைந்துள்ளன.

ஒரே காம்பவுண்டில் குடியிருப்பவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது “இங்குக் குடி இருப்பவர்கள் கதம்பப் பூக்கள்; நிறம் வேறுபட்டவர்கள்; மாநிலம் மாறுபட்டவர்கள்” என்கிறார்.

பல்வேறு பூக்களின் கலவை கதம்பம், அதைப்போலப் பல்வேறு மக்கள் வாழ்கின்றனர் எனக் காணும் உவமை சுவையானதாக உள்ளது.

குப்பை மேட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது அது ஒரு ‘சமூகப் பணி; பொதுச் சொத்து’ என்கிறார்.

“நாலுபேர் படித்தால் போதும்; புதிய செய்திகள் சொல்ல விரும்புகிறேன். உணர்வுகளை மட்டும் வைத்து விளையாடவில்லை” என்ற கதாபாத்திரம் பேசும்தன்மை இந்நாவல் ஆசிரியருக்கே பொருந்துவதாக அமைந்துள்ளது.

“மனித நேயத்தைப் பற்றி எழுதவேண்டிய கவிஞர்களும் திசைமாறிச் சில சமயம் மதங்களுக்கு விளக்கம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கோபவரிகளும்—

“இன்று நமது நாட்டுத் தேவை மத நம்பிக்கை அல்ல. தன்னம்பிக்கை; கோயில்களைப் புதுப்பிக்க அல்ல. தொழில்களை உண்டாக்க; பழைய ஞானத்தைப் பற்றி ஆராய்வது அல்ல புதிய விஞ்ஞானத்தை அறிய, இளைஞர்களைத் துாண்டுவது.வாழ்க்கையை நேசிக்கக் கற்றுத் தரவேண்டும்......” என்ற தொடர்ந்து வாழ்க்கைப் போக்குக்கு வழிகாட்டுகிறது ரா.சீ.யின் இந்த வரிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/7&oldid=1112370" இலிருந்து மீள்விக்கப்பட்டது