பக்கம்:குப்பைமேடு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

 “அவருக்கு இரண்டு பெண்கள்; மூன்று பையன்கள் அவற்றின் விரிவுகள்; பிரிவுகள் எல்லாம் இருக்கிறார்கள்” என்று பெரிய குடும்பத்தைப் பற்றி விளக்கமும்,

“பெண் அவளுக்கு நாமம் ஒன்றுதான்; வடிவங்கள் வேறு; அறிவில் கலைமகள்; அழகில் திருமகள்; எதிர்ப்பில் மலைமகள்: மொத்தத்தில் அறியமுடியாத பரம்பொருள்” என்றும்-

“கருத்துக்கள் இல்லாத எழுத்து அர்த்தமற்றவை. வெறும் உணர்வுச் சித்திரங்கள் படிக்கும்போது நெஞ்சைத் தொடும்; பிறகு அவர்களைக் கைவிடும். சிறந்த லட்சியங்களை உருவாக்க வேண்டும். மனிதனின் உரிமைகளுக்கு வழிகோலவேண்டும். இது இலக்கியத்தின் பணி.” என்ற தனது இலக்கிய நோக்கையும்-

“மனிதனை நேசிக்கக்கற்றுக் கொள்; தாழ்ந்தவர்களைத் தூக்கிவிடு; நோயுற்றவர்க்கு ஆறுதல் அளி; அன்பு என்பதை அழகுடன் பரப்பு; இது அவர்கள் கற்றுத்தரும் படிப்பினைகள்” என்றும்—

“இன்றைய வாழ்வைப் படம் பிடிப்பது துடிப்புள்ள எழுத்து. நோய் நாடி அதன் காரணம் நாடி மருந்தும் சொல்வதுதான் எழுத்து” என்றும்—தீர்வு கூறுகின்றார்.

‘சீற்றம்’ என்ற தனது மற்றொரு குறு நாவலில் பெற்றோரை மதிக்காத புகுந்த வீட்டில் இருந்து வெளியேறி வரும் பானு என்ற கதா பாத்திரத்தை அறிமுகம் செய்கிறார்; பெண்மையை உயர்வு செய்கிறார்.

“தூசுபட்ட சட்டையைத் துடைத்துக் கொள்வதைப் போல் அறிமுகம் இருந்தது” என்ற அழகான உவமையைத் தருகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/8&oldid=1112371" இலிருந்து மீள்விக்கப்பட்டது