பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##

தான், இதற்குமுன், ஒருவரையொருவர் கண்டு பழகிய துண்டா? இல்லை; இவ்வாறு நம் புறத்தொடர்பில், நம் இரு வரிடையே எத்தகைய உறவும் இல்லை.எனினும், உண்மை அன் புடையநம் உள்ளங்கள் இரண்டும் ஒன்றுகலந்துவிட்டன.நல்ல மண்ணும், அம்மண்ணில் ஊற்றிய நீரும் சேர்ந்து உண்டான கலவைபோல் ஆயின நம் உள்ளங்கள்; மன்னும் நீரும் ஒன்று கலக்கும் கலவைக் கண், இரண்டுமே ஒன்று கலக்கும்; இரண்டுமே தம் இயல்பு இழக்கும்; அங்கே, தனி மண்ணும் இராது; தனி நீரும் இராது; மண்ணின் தின்மையும் ஆண்டு இராது; நீரின் ஒடுந்தன்மையும் ஆண்டு இராது; மண்ணும் நீரும் மறைய சேறு என்ற புதுப்பொருள் தோன்றும்; அச் சேற்றில்மண்ணின் இயல்பும் இருக்கும்; நீரின்இயல்பும் இருக் கும் அவ்விரு பொருள்களும், அவற்றின் இரு இயல்புகளும் இரண்டறக் கலந்து ஒன் ருகும்; இவ்வாறு, என் தனி ஆண் மையும், உன் தனிப் பெண்மையும் அழிய, என் ஆன்மையும் உன் பெண்மையும் ஒன்று கலக்கத் தோன்றிய ஒரு புது நிலை யைப்.பிரிவறியாப்பெருநிலையைப்பெற்றுவிட்டோம்;ஆதலின் பிரிவேமோ என்று எண்ணித் துயர் கொள்ளுதல் பொருந் தாது” என்று கூறித் தேற்றினன்.

யாயும் ஞாயும் யாராகியரோ?

எங்தையும் நுங்தையும் எம்முறைக் கேளீர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செமபுலப் பெயல்நீர் போல

அன்புடை கெஞ்சம் தாம் கலந்தனவே!”

a குறுந்தொகை 40. செம்புலப் பெயல் நீரார்.

யாய்-என் தாய் ஞாய்-உன் தாய், யார் ஆகியர் ஒரு வருக்கொருவர் எத்தகைய உறவுடிையரி: எந்தை.என் தந்தை: நுந்தை-உன் தந்தை எம்முறை.எவ்வகையில்; கேளிர்-உறவுடையர் அறிதும். அறிந்தோம்; செம்புலம். செம்மண் நிலம்: பெயல் நீர்-மழைநீர். -