சு. சமுத்திரம் 19 அண்ணாவிக்கு மாலை அணிவித்தார்கள் அந்தப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாகி விட்டதால், பி.ஏ., பி.டி படித்த ஒருவரைத் தலைமை ஆசிரியராகப் போட்டார்கள். இந்தப் பள்ளியில், வேலை செய்து கொண்டே பி.ஏ.பி டி. படித்து 'புரமோஷன் வாங்கி, அவர் தலைமையாசிரியராக, முதல் தடவையாகப் பொறுப்பேற்றார். தன்னை ஆட்டிவைத்த தலைமையாசிரியர் போல் தானும் ஆட்டிவைக்க வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவர் அவர் அண்ணாவிக்கு ஊரில் இருக்கும் செல்வாக்கும், மாணவர்கள் மட்டுமல்ல, இதர ஆசிரிய, ஆசிரியைகளும் அவரிடம் அதிக ஒட்டுதலாக இருப்பதும், தலைமையின் தலையைக் குடைந்து, நெஞ்சுக்குள் புழுக்கத்தை ஏற்படுத்தியது. அண்ணாவி, தலைமை ஆசிரிய ஸ்தானத்திற்கு உரிய மரியாதையை அளிக்கத் தவறவில்லை அதே நேரத்தில், காலையில் பள்ளிக்கு வந்ததும், தான் "நமஸ்காரம் எச்செம் லார்" என்று சொல்லும் போதெல்லாம், அவர் அலட்சியமாகத் தலையை லேசாக ஆட்டுவதையும் கவனிக்கத் தவறவில்லை முன்னால் வந்து நின்ற அண்ணாவியைப் பார்த்துவிட்டு "எஸ் " என்று கேள்வி கேட்கும் பாவனையில் இருந்தார் தலைமை ஆசிரியர் "ஸார், நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க நம்ம லோகநாதனை சயன்ஸுக்கும், அருமைநாயகத்தைக் கணக்குக்கும். ரொட்டேஷன் பீரியடில போட்டிருக்கிங்களாம். லோகன் கணக்குல எக்ஸ்பர்ட்: நாயகம் சயன்ஸுல கெட்டி. அதனால. " தலைமையா சிரியர் முகத்தைச் சுளித்தார் பிறகு, "மிஸ்டர் பூதலிங்கம், இதுல நீங்க தலையிடாமல் இருக்கிறது பெட்டர்" என்றார் அலட்சியமாக அண்ணாவி, கூனிக் குறுகிக் கொண்டே வெளியே வந்தார் இன்னொரு நாள், அட்டெண்டென்ஸ் ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போடுவதற்காக, அண்ணாவி தலைமையாசிரியரின் அறைக்குள் போனார் சுவரில், முருகனின் படமும், சரஸ்வதி தேவியின் படமும் காட்சியளித்தன இந்தத் தெய்வப் படங்களுக்கு, அண்ணாவி தினமும் ஊதுவத்தி கொளுத்திவைப்பார் வத்தியில் இருந்து எழும்புகை, இரு தெய்வப் படங்களையும் சூழ்ந்து வியாபித்து, பிரபஞ்சத் தோற்றத்தைக் காட்டும் இப்போதும் அந்தப்
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/21
Appearance