உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு-சமுத்திரம் 29 "சாமிக்கு." கோயில் பக்கம் தலையே வைக்காத தியாகுவிற்கு, தன் காதுகளையே நம்பமுடியவில்லை தான் பேசியதைத் தானே கேட்டதும், இவ்வளவு தூரம் பொய் பேசத் தனக்கு சக்தி இருக்கிறது என்பதை அறிந்ததும், அவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. நல்லம்மா, பூவை அளந்தான் பூ மென்மையா, அவள் கரம் மென்மையா என்ற ஆராய்ச்சியில் தியாகு ஈடுபட்டான் "நல்லா, பார்த்துக்க சாமி. மூன்று முழம்" என்று சொல்வி, பூவை அவனிடம் கொடுத்தாள். கரங்கள் உரசின. கண்கள் கிரங்கின. "உன் கையால், எதைக் கொடுத்தாலும் நான் வாங்கிக் கொள்வேன்." "அடி கொடுத்தால் கூடவா?" அவள் சிரித்துக் கொண்டே கேட்டாள். தியாகுவுக்குத் துணிச்சல் வந்து விட்டது. "நல்லம்மா! நீ சினிமாவுக்குப் போறதுண்டா?" தன் பெயரை உச்சரித்ததும் அவளுக்கு மகிழ்ச்சியாகி விட்டது. இந்தப் பொறுக்கிப் பசங்க "நள்ளம்மா...நள்ளம்மா." என்பாங்க. இந்த ஆளு எவ்வளவு அயகா உச்சரிக்கான். நல்லம்மா, அவன் கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, "நான், அனாதை, வயகப் பொண்ணு; சினிமால்லாம் கட்டுபடியாகாது" என்றாள் "அப்படின்னா, என் கூட வர்றியா?" சொன்ன பிறகு, ஏன் சொன்னோம் என்று நினைத்து, அவள் திட்டப் போகிறாள் என்று பயந்து கொண்டிருந்தான் தியாகு. மாறாக, அவள் நாணத்தால் தலை கவிழ்ந்து, மெல்ல அவனை நோக்கி "நாளைக்குப் போவோமா?" என்றாள். தியாகுவிற்கு உலகம் அனைத்தும், தன்னை மதிப்பது போலவும், நல்லம்மாவிற்கும் தனக்கும் பூர்வஜென்மத் தொடர்பு இருப்பது போலவும் நினைத்தான். தெருவைச் சுற்றி வருகிற அவள் முகம் கருத்துவிட்டது. "சீக்கிரம் போயிடுங்க...அதோ பொறுக்கிப் பசங்க ..சந்தேகத்தோடு பார்த்துட்டு வர்றாங்க. போங்க" என்றாள் "போகமாட்டேன். உன்னைக் காப்பாற்றி விட்டுத்தான் போவேன்."