பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 குற்றம் பார்க்கில் போல் ஆடின. வறுமையையே பெருமையாகக் கருதுபவள் போல், ஒருவித அலட்சிய - ஆனால் அகம்பாவமில்லாத பார்வை. நேரம், இருட்டை நெருங்கிக் கொள்டே வந்தது பஸ்சுக்காகக் காத் திருப்பவன்போல், பாவலா செய்து கொண்டே, தியாகு அவளை நோட்டம் விட்டான் 'ஏன் இப்படி ஒரேயடியாக நிற்கிறாள்' என்று எவரும் சந்தேகப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, இடம் கிடைக்காது என்று தெளிவாகத் தெரியும் பஸ்களில் ஏற முயற்சி செய்வான் பஸ் கிடைக்காமல் தவிப்பவன் போல் "சே! சே! இந்த பஸ்களே மோசம்" என்று அவள் காது கேட்கும்படி முணங்கினான். அவளும் ஒருவிதமாகப் பார்த்து. சூள் கொட்டினர்ள் ஆயிற்று. பஸ்களும் ஆட்களும் நகர்ந்தபடி இருந்தன. இப்போது ஆள் அரவம் இல்லை. அவள் மட்டும் தனியாக இருந்தாள் பூக் கடைகளை எடுத்து வைத்து விட்டு, புறப்படுவதற்கோ படுப்பதற்கோ தயார் செய்பவள் போல் ஆயத்த வேலைகளில் ாடுபட்டாள். தியாகு அவளை நெருங்கினான் கால்கள் தாமாக நடுங்கின வியர்த்துக் கொட்டியது. எப்படிப் பேசுவது என்று அவனுக்குப் புரியவில்லை. ‘எப்படிப் பேச்சைத் தொடங்குவது?’ என்று அவன் தடுமாறிக் கொண்டிருக்கையில், "என்னா சாமி பூ வேணுமா?" என்று அவளே கேட்டாள், குறும்பு தவழும் கண்களுடன் "ஆமாம். வேனும்." "எத்தனை முழம் சாமி?" "மூன்று முழம் " "உன் வீட்டுக்காரி, கொடுத்து வச்சவங்க. எந்த ஆம்பிளையும், பொண்டாட்டிக்கு முணுமுழம் வாங்கிதை இந்த நல்லம்மா பார்த்ததில்லை " நல்லம்மாவின் இந்தப் பேச்சைக் கேட்டதும், தியாகுவின் மனச்சாட்சி உறுத்தியது எப்படியோ சமாளித்துக் கொண்டு. "எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை’ என்று சொல்லி, முழுப்பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்க முயற்சி செய்தான். "அப்படின்னா, பூ யாருக்கு?" அவள் கேட்டாள்