பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு-சமுத்திரம் շ7 நீடிக்கவில்லை. திடீர் என்று தியாகுவிற்கு அவள் மேல் வெறுப்பு வந்துவிட்டது தனது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத, தன்னுடைய கலைத்திறன்களைப் புரிந்துகொள்ளும் அறிவில்லாத, தன் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் பக்குவம் இல்லாத ஒரு ஜடத்தை மனந்துவிட்டதாகத் தியாகு நினைத்தான். திருமணத்திற்கு முன்பு தனக்கு வரப்போகிறவள் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும்' என்று கற்பனை செய்த தியாகுவிற்கு வந்தவள் அந்தக் கற்பனையில் கால்பங்குகூட இல்லை என்று எண்ணியதும், அவனுக்கு வாழ்க்கையே பிரச்சினையாகியது அதன் எதிரொலியாக, அலுவலகம் விட்டதும் நேராக வீட்டுக்கு வராமல் கண்டபடி சுத்துவது அவனுக்கு வழக்கமாகிவிட்டது. பரிவு உணர்ச்சியோ பாசமோ இல்லாதவள் மனைவியாகக் கிடைத்துவிட்டாள் என்ற நினைவில் எழுந்த சுய இரக்க உணர்வில் அவதிப்பட்ட அவன் இன்றைக்கு ஒரு முக்கியமான காரியத்திற்குப் போவதால் டிப்டாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆடைகளை மாற்றுவதற்காக வீட்டிற்குச் சென்றான். டாக்சி மாம்பலம் சென்றதும் பஸ் ஸ்டாண்டிற்குச் சற்று தொலைவில் இறங்கி ஐந்து நிமிடம் அங்குமிங்குமாகச் சுற்றிவிட்டு பஸ் நிலையத்திற்கு வந்தான் அங்குத் தன்னந்தனியாகப் பூக் கட்டிக் கொண்டிருந்த இளம் பெண்ணை, வேகத்தோடு பார்த்தான். இப்படி ஒரு பெண், இங்கே இருக்கிறாள் என்பது, நேற்று தான் அவனுக்குத் தெரியும். வழக்கமான ஊர் சுற்றும் வேலையில், நேற்று அவளைச் சந்தித்தான். அவள் பார்வை என்னவோ போல் இருந்ததால், இன்று வந்து விட்டான். அவளுக்கு, பதினெட்டு, பத்தொன்பது வயதிருக்கும். தலையில் போதிய எண்ணெய் இல்லாததால், அவளின் கேசம், முன் நெற்றியை வருடிக் கொண்டிருந்தது. அதுவே, அவளுக்குத் தனி அழகைக் கொடுத்தது. செழிப்பான ஆமணக்குச் செடியைப் போன்ற தேகம் வறுமையில் வாடிய அதே நேரத்தில் வைரம் பாய்ந்த கண்களும், வாயில் புடவையும், ஸ்டைல் இல்லாத ஜாக்கெட்டும் அணிந்திருந்த அவள், ஆடி ஆடி பூத்தொடுக்கும்போது, அழகு அவயவங்கள் அத்தனையும் ஆடுவது, அழகே உருவெடுத்து, பிறகு அதுவே, ஆடுவது போல் தோன்றியது (குறைந்த பட்சம், தியாகுவுக்கு அப்படிக் காட்சியளித்தாள்.) அவளின் கண்கள் அங்குமிங்குமாக, ஊஞ்சல்