பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 குற்றம் பார்க்கில் விசுவாமித்திரனானான். "போகும்போதே கேட்டுவிட்டாயா தரித்திரம்.போகிற உருப்பட்டால்தான்" என்றான் அலட்சியம் கலந்த கோபத்துடன். பத்து நிமிடம் தாமதமாய் வந்ததற்காகக் கணவனைக் கடிந்து கொண்ட எதிர்வீட்டுக்காரியின் நினைவு, கோமதிக்கு வந்தது. விளக்கின் வெப்பத்தைத் தாங்க முடியாமலும், அதே நேரத்தில் அதைவிட்டு, அகல முடியாமலும் தவிக்கும் விட்டில்பூச்சியைப் போல், கோமதி தவித்தாள். சோகத்தைத் தைரியமாக மாற்றிக் கொண்டு, "இப்படிப்பட்டவர்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்? ஏதாவது விடுதியில் தங்கி விரும்பியவாறு நடக்கலாமே!" என்று சொல்லிக் கொண்டு விம்மினாள்! "அதைப் பற்றித்தான். நானும் நினைக்கிறேன: விவாகரத்து செய்துவிட்டால் போகிறது" என்று நிதானமாகச் சொல்லிவிட்டு, அவசரமாக வெளியேறினான். அவன் அவசரம் அவனுக்கு, சொல்லக்கூடாத ஒன்றை, அவனிடமிருந்து கேட்ட கோமதி, நிலைகுலைந்துபோய் கட்டிலில் அப்படியே சாய்ந்தாள். அந்தக் கட்டிலையே பாடையாக நினைத்து, தான் இறந்ததுபோல் கற்பனை செய்துகொண்டு நினைவிற்கும் கனவிற்கும் இடைப்பட்ட நிலையில், வாழ்வும் சாவும் சந்திக்கும் எல்லைக்கோட்டில், துன்பத்தின் தொடுவானில் தவித்து, புரண்டு விரக்தியடைந்து, தன்னையே மறந்து தலை சாய்த்தாள். தியாகு தலைவிரி கோலமாக பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான். இன்றைக்கு எப்படியாவது அந்தப் பூக்காரியை வழிக்குக் கொண்டு வந்து விடவேண்டுமென்ற நோக்கத்தோடு மாம்பலம் செல்லும் பல்கக்காகக் காத்து நின்றான். பஸ் வரும் வரைக்கும் காத்திருக்க அவனுக்குப் பொறுமையில்லை. வழியில் வந்த டாக்சியில் ஏறி மாம்பலம் விரைந்தான். தியாகுவிற்கும் கோமதிக்கும் திருமணம் நடந்து ஒரு வருடம் ஆகிறது. கிராஜுவேட் மனைவி கிடைப்பாள் என்று நினைத்த தியாகு, பெற்றோரின் வற்புறுத்தலால் எட்டாவது படித்த கோமதியை மணம் செய்ததில் ஒரளவு வருத்தம் இருந்தாலும் அந்தக் குறை. தொடக்க கால இல்லறத்தில் தெரியவில்லை. ஆபீசர் வேலையில் எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லாத கணவன் கிடைத்ததில் கோமதி மகிழ்ந்து போனாள். ஆனால், அந்த மகிழ்ச்சி