பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 25 என்பது அவளுக்குத் தெரியும் ஆனால் அதற்கு தன்நிலையும் ஒரு காரணமல்லவா? கோமதியால் கண்ணிரை அடக்க முடியவில்லை கோமதியும், எதிர்வீட்டு இளம் பெண்ணிற்கு அழகில் குறைந்தவளல்ல. சொல்லப்போனால், அவளை விட இவள் நல்ல நிறம், இளமை ஒரே ஒரு பல் தெற்றிக் கொண்டிருந்தது ஆனால், அதுவே அவளுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தது. அவள் கணவன் தியாகுவே, இதைப் பலமுறை அவளிடம் சொல்லியிருக்கிறான் எல்லாம் 'அந்த 'முப்பது நாள் காலம் வரைதான் கோமதிக்கு நினைக்க, நினைக்க அழுகையாக வந்தது அவள் தனது கணவனுக்கு மனதறிந்து, எந்தவிதத் தொல்லையும் கொடுக்கவில்லை இருந்தும் அவன் அவளை அலட்சியப் படுத்துகிறான் எதற்கெடுத்தாலும் எரிந்துவிழுவதும், சிலசமயம் அடிப்பதற்குக் கையை உயர்த்துவதும், இரவு பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு வருவதும் அவனுக்கு வாடிக்கையாகி விட்டது கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, கோமதி, புடவைத் தலைப்பால் கண்ணிரைத் துடைத்துவிட்டு, கதவைத் திறந்தாள் அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது வழக்கத்துக்கு விரோதமாக, அவள் கனவன் தியாகு, வீட்டிற்கு வந்திருந்தான். ஏதோ நல்ல காலம் பிறந்து விட்டதாக நினைத்த கோமதிக்கு தான் பட்ட கஷ்டமெல்லாம் கடந்தகாலமாகி விட்டதாக நினைத்தாள் அந்த மகிழ்ச்சியில் இதோ ஒரு நிமிடத்தில் காபி கொண்டு வருகிறேன்' என்று சொல்ல நினைத்தவள். அவரே, முதலில் பேசட்டும்' என்று நினைத்து, காபி போடுவதில் முனைந்தாள் அவளின் கடைக்கண், அவனைக் கவனித்துக் கொண்டே இருந்தது தியாகு, மனைவி என்ற ஒருத்தி இருப்பதை நினைத்ததாகத் தெரியவில்லை அவசர அவசரமாக, புதிய பேண்டையும், சட்டையையும் போட்டுக் கொண்டு, தலைமுடியோடு சற்று அதிகமாகப் போராடிவிட்டு முகத்துக்குப் பவுடர் பூசி பீரோவைத் திறந்து இருபது ரூபாயை எடுத்து, பையில் வைத்துக் கொண்டு. வெளியே செல்வதற்காகக் கதவைத் திறப்பதற்கும், கோமதி காபி கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது அவன் அவசரமாக வந்த வேகத்திலேயே, வெளியேறுவதைப் பார்த்த கோமதியால் அழுகையை அடக்க முடியவில்லை "வந்ததும், வராததுமாக எங்கே போகிறீர்கள்?" தியாகு