பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பூக்காரி கோமதியின் எதிர் வீட்டுக்காரி கனகம், நைலக்ஸ் புடவையும், ஊதாநிற ஜாக்கெட்டும் அணிந்து கொண்டு, கண்ணிற்கு மை தீட்டி, முகத்திற்கு நிதானமாகப் பவுடர் போட்டுக் கொண்டிருந்தாள் அவளின் இரண்டு வயதுப் பையன் பால்கனியில் நின்று வெளியே எட்டிப் பார்க்க முயற்சி செய்தான் சுவர் அவனுக்கு எட்டாமல் இருந்ததால் எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தான். "குழந்தையை இப்படியா வெளியே விட்டுட்டு நிற்பது?" என்ற குரல் கேட்டு, கனகம் வாசலுக்கு வந்தாள் அங்கே அவள் கணவன் குழந்தையை எடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான். சற்று நேரத்திற்கு முன்புவரை. தலைவலி விளம்பரத்திற்கு போஸ் கொடுப்பவள் போல் போரடித்து'ப் போயிருந்த அவளது முகம் கணவனைக் கண்டதும் புன்னகை பூத்தது "ஆபீசில் இருந்து வர, பத்து நிமிடம் தான் ஆகும் ஐந்து பத்துக்கு வரவேண்டிய நீங்கள், ஏன் ஐந்தரைக்கு வந்திருக்கிறீர்கள்?" என்று பொய்க் கோபத்தோடு, சிணுங்கிக் கொண்டு கேட்டாள் அவன் அதற்குப் பதிலளிக்காமல், அவள் இடையை வளைத்துப் பிடித்தான். "சரி சரி யாராவது பார்க்கப் போகிறார்கள்" என்று சொல்லிக் கொண்டு, கோமதி தங்களைப் பார்க்கிறாளா என்று நோட்டம் விட்டாள் அவள் நினைத்தபடியே கோமதி பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அவன், இடையைப் பிடிக்கும் போது, அவள் போய்விட்டாள் கனகத்திற்குப் பரம திருப்தி இன்னும் இடையை விடாத கணவனைப் பார்த்து "விடுங்க அவள் பார்க்கிறாள்" என்று கூறியபடி, எங்கே எடுத்து விடுவானோ என்று பயந்துபோய் அவன் கையின் மேல், தன் கரத்தை வைத்துக் கொண்டு, எவரும் பார்க்காத வீட்டிற்குள் கணவனை இழுத்துக் கொண்டு சென்றாள் நடந்ததை எல்லாம், பாதி பார்த்தும், பாதி பார்க்காமலும் இருந்த கோமதி பெருமூச்சு விட்டபடி, கட்டிலில் உட்கார்ந்தாள் கனகம் அவளை மட்டந்தட்ட வேண்டும் என்பதற்காகத் தான், பகிரங்க'க் காதலை அதிகப் படுத்துகிறாள்