பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு_சமுத்திரம் 23 சொல்லுங்க அவர் சம்மதிக்கலன்னா நளினா சொன்னது மாதிரி, ஹெல்த் விலிட்டர்களுக்கும், கிராம சேவகர்களுக்கும் அதை ஒய்வு அறையாய்க் கொடுத்திடுங்க" என்று ஓய்வு பெற்றவர் சொன்னார் "நாலு மாதத்தில வந்திடுறதா சொன்னிங்க, இப்போ நீங்க சொல்றதப் பார்த்தா | வரமாட்டிங்க போலிருக்கே நிஜத்தைச் சொல்லுங்க அண்ணாவி நீங்க வரமாட்டியளா?" என்று ராமசாமி கத்திய வார்த்தைகள் அண்ணாவியின் காதில் விழாதபடி ரயில், பகைவிட்டுக் கொண்டே புறப்பட்டு விட்டது (தலைமை ஆசிரியர் தன் அறையில் புகை விட்டுக் கொண்டிருந்தார் ) உண்மையைப் புரிந்து கொண்டதற்கு அடையாளம் போல் அழுத ராமசாமியின் கண்களை, தங்கையா அழுது கொண்டே துண்டை வைத்துத் துடைத்தார் "கடவுளை எந்நாளுமே கனவிலும் மறவாதே" என்ற பாடலை அவர்கள் முணுமுணுத்துக் கொண்டே, அண்ணாவியைக் கடவுளாகப் பார்த்தார்கள் அந்த ஊரின் ஆன்மா, அன்புக்குரிய அண்ணாவி வடிவில், ரயிலில் பறந்து கொண்டிருந்தது