பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 குற்றம் பார்க்கில் சொல்லாமல் கொள்ளாமல், திடீரென்று ஊரைவிட்டுக் கிளம்பும் அண்ணாவியின் போக்கு, ஊரார்க்குப் புரியவில்லை தலைமை ஆசிரியருக்கும், அவருக்கும் ஒத்துவரவில்லை என்று காற்று வாக்கில் செய்தி அடிபட்டாலும், 'நம்ம அண்ணாவியிடம் மோதுறதுக்கு அவருக்கென்ன பைத்தியமா' என்று ஒவ்வொரு வரும், தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டார்கள் அண்ணாவியும், "மகனைப் பார்க்க ஆசை வந்திடுச்சி" என்று தட்டிக் கழித்தார் ரயில் நிலையத்தில் ஒரே கூட்டம் சக ஆசிரிய ஆசிரியைகள், ராமசாமி, தங்கையா உட்பட, பெருந்திரளான மக்கள் அவரைச் சூழ்ந்து நின்றனர் அண்ணாவி’ லீவில் போவதாகத்தான் அத்தனைபேரும் நினைத்துக் கொண்டார்கள். தலைமை ஆசிரியரின் போக்கைத் தன்னையும் மீறி சொல்லிவிடக் கூடாதே என்பதற்காக அண்ணாவி பேச்சைக் குறைத்துக் கொண்டார் தங்கள் அண்ணாவி, நான்கு மாத விடுமுறையில் போவதை, தங்கையாவாலும், ராமசாமியாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை "அண்ணாவி, எங்கள உங்க பிள்ளைங்கன்னு சொன்னிங்க இப்போ இந்த மகன்கள விட்டுட்டுப் போவ எப்படி மனம் வந்தது?" என்று ராமசாமி அழாக் குறையாகக் கேட்டார் அண்ணாலி முதல் முறையாகக் கண்ணிர் விட்டார் பின்பு மனதை அடக்குவது போல் மூச்சைப் பிடித்துக் கொண்டார் பிறகு, "டேய் சுப்பு, ராமன் விஷயம் ஞாபகம் அந்தப் பொண்ணு நளினா ரொம்ப நல்லவள் " என்று சுப்புவின் காதோடு பேசினார் ரயில் வண்டியில், 'கார்ட் கொடியை எடுத்தார் அண்ணாலி பொதுப்படையாக,"ஏண்டா கலங்குறிங்க நான் தான் இன்னும் நாலு மாசத்திலே வந் துடுவேனே. அப்புறம், நம்ம ஹெட்மாஸ்டர் கிட்டேயோ வேறு எந்த ஆசிரியர்கிட்டேயோ ஏடா கோடமாய் நடந்திங்கன்னா பிச்சுப்புடுவேன் பிச்சு" என்றார் ரயில் வண்டியை விசில் உஷார் படுத்தியது பச்சைக் கொடி ஆடியது அண்ணாலி சுந்தும் முற்றும் பார்த்தார் பிறகு, "அப்புறம் ஒரு சமாச்சாரம் நான் தங்கியிருந்த வீட்டில ஹெட்மாஸ்டர இருக்கச்