உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§0 குற்றம் பார்க்கில் "ஐயோ, அவங்க பொல்லாதவங்க முதல்லே கைவச் சுட்டுத் தான் பேசுவாங்க அதோ பஸ் வருது அதுல போங்க " "உன் கதி?' "எனக்கு இதெல்லாம் சகஜம். எப்படியும் நான் டெய்லி அவங்க கண்ணுல முழுச்சித்தானே ஆகணும் பழகிப் போச்சி. நீங்க போயிடுங்க " நல்லம்மா அழாத குறையாகக் கெஞ்சினாள் சிறிது தயங்கிய தியாகு நிற்கலாமா வேண்டாமா என்பதுபோல் தயங்கித் தயங்கி, வந்து கொண்டிருந்த பஸ்ஸில் ஏறினான் அப்படி ஏறும்போது கண்டக்டர் விசில் அடிப்பதற்காக விசிலை வாயில் வைத்திருந்தார் தியாகு அதில் மோத, விசில் கண்டக்டர் உதட்டில் மோத, தியாகுவிற்கு நெற்றி வீங்கிவிட்டது. கண்டக்டர், மூன்று நாளைக்கு விசிலே அடிக்க முடியாதபடி உதடு வீங்கிவிட்டது கண்டக்டர், தமக்கே உரிய பாணியில் திட்டியதையும் பொருட்படுத்தாமல், தியாகு, சேத்துப்பட்டில் இறங்கி, வீட்டை நோக்கி விரைந்தான். கையில் இருந்த மூன்று முழப் பூவை, அருவருப்பாக நோக்கினான். கோமதிக்குத் தேவை மூன்று முழக் கயிறுதானேயன்றி பூவல்ல, அந்த அசடுக்கு பூ ஒரு கேடா? கையில் இருந்த பூவை நழுவ விட்டான் பின்னால் வந்த அப்பாவி ஒருவர் "சார் இந்தாங்க, உங்க பூவு. கெட்டியாப் பிடிச்சுக்கங்க" என்று சொல்லி அந்தப் பூவைக் கொடுத்துவிட்டு தேங்ஸ்க்காகக் காத்து நின்றார் தியாகு முணங்கிக் கொண்டே நடந்தான் - அனாதையான அந்தப் பூக்காரி பொறுக்கிகளிடம் எப்படி அவஸ்தைப் படுகிறாளோ? சிந்தனையிலாழ்ந்த தியாகு. பூவை எறிய வேண்டுமென்பதை மறந்து, வீட்டுக் கதவைத் தட்டினான் அவ்ன் நெற்றி வீங்கியிருப்பதைப் பார்த்த கோமதி துடிதுடித்துப் போனாள். "ஐயோ என்னங்க இது" என்று சொல்லிக் கொண்டே, அவன் நெற்றியை வருடினாள் தியாகு அவளை ஆச்சரியத்தோடு பார்த்தான் அவனுக்குக் காயம் படுவதும், அவள் அதற்காகத் துடிதுடிப்பதும் இதுதான் முதல் தடவை. இருந்தாலும் வழக்கமான பாணியில் தரித்திரம் பிடிச்ச நீ, போகும் போதே கலாட்டா பண்ணியதால் வந்தது' என்று வாய்வரை வந்த சொல்லை அடக்கிக் கொண்டு "இப்போ சரியாயிட்டுது" என்று எந்திரம்போல்