பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க-சமுத்திரம் 31 கூறினான் அவன் கையில் இருந்த பூவை, கோமதி கவனித்தாள் தனக்காக 'அவர் பூ வாங்கியிருக்கிறார். எவ்வளவு அன்பிருக்க வேண்டும் அவருக்கு இவ்வளவுக்கும், சாயங்காலம் ஏதோ ஆபீஸ் காரியமாய் புறப்பட்டவரிடம் சண்டை போட்டாள். இருந்தும் அவர் பூ வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் முதன் முதலாக, கணவன் பூ வாங்கிக் கொண்டு வந்திருப்பதை நினைத்த அந்தப் பேதைக்கு அவன் உலகையே தன் கையில் "இந்தா பிடி" என்று கொடுப்பது போல் தோன்றியது அவன் கரங்கள் இரண்டையும் தூக்கி, தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள் உணர்ச்சி பொங்க "அத்தான் ! உங்க கையாலே இதை தலையில் வையுங்க சாயங்காலம் உங்களைப் புரிஞ்சிக்காமே பேசிட்டேன்" என்று சொல்லி அவன் மார்பில் தலை சாய்த்தாள் தியாகு துணுக்குற்றான் பிள்ளையார் பிடிக்கப் போனால், அவனையறியாமலே அவனுக்குத் தெளிவு பிறக்கத் தொடங்கியது. புதிய கோமதி ஒருத்தி இருக்கிறாள் என்பதை உணர்ந்த அவன் சிந்தனை பின்னோக்கிச் சென்றது பூக்காரி அனாதைதான் ஆனால், கசப்பான அனுபவங்களாலும், தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளாலும், துன்பப்பட்டு, எதையும் சமாளித்துக் கொள்வாள் ஆனால் கோமதி இவள்தான்! கோமதியையும் பூக்காரியையும் ஒப்பிட்டு நோக்கிய தியாகுவிற்கு ஞானம் பிறந்தது. குரங்காட்டம் போட்ட அவன் மனம் மெல்ல மெல்ல சம நிலைக்கு வந்தது கோமதியின் உயர்ந்த குணமும் அன்புள்ளமும், அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது