பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S2 எந்நன்றி கொன்றார்க்கும். அந்த வீடு ஒரு பன்றிக்குடில் மாதிரி, பனை ஓலைகள், மகுடம் மாதிரி மேல் பரப்பை மறைத்தும், மறைக்காமலும், காற்றோடு போராடி அலுத்த சல்லடைகளை விழுப்புண்ணாக்கி, கன் இமைபோல் முடிமூடி ஆடிக் கொண்டிருந்தன முத்தையன் மாடுகளை அவிழ்த்து, தொட்டியில் 'தன்னிர் காட்டிவிட்டு', வைக்கோலை அளிக்குள் வைத்து, மாடுகளை மீண்டும் கட்டிவிட்டு நடையைக் கட்டினான் அந்தத் தெருவிலேயே, பெரிய வீடான இன்னொரு ஒலை வீட்டிற்குள், அவன் நுழைந்தபோது, அவன் பெரியப்பா முத்துப்புதியவன், நார்க் கட்டிலில் உட்கார்ந்து வேப்பங்குச்சியைப் பல்லில் குத்திக் கொண்டிருக்கையில், மூட்டைப் பூச்சிகள் அவர் முதுகைக் குத்தின முத்தையனின் வருகையை அங்கீகரித்ததுபோல், வேப்பங்குச்சியைக் கீழே எறிந்துவிட்டு வாயைத் துண்டால் துடைத்துவிட்டு அவனை உட்காரச் சொல்வது போல், ஊன்றிக் கொண்டிருந்த ஒரு கையை எடுத்து, மடியில் வைத்தார் முத்துப்புதியவன். முத்தையன் உட்கார்ந்து கொண்டே, "என்ன பெரியப்பா நான் சொன்னது" என்றான் it. "அது சரிப்பட்டு வராதுப்பா "ஏன் சரிப்படாது? போடு போடுன்னு போட்டே ஆகணும். நம்ம தம்பி சப் இன் ஸ்பெக்டர் பதவி ஏத்துக்கிட்டாள். இதைக் கொண்டாடாட்டா, எதைக் கொண்டாடறது? இப்போ, பேக்குப்பய பிள்ளைககூட பிறந்த நாளுன்னு கேக் வெட்றான் நீரு என்னடான்னா "அதுக்கில்ல முத்தையா எதோ சின்னச்சாமி போலீஸ்ல