உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 குற்றம் பார்க்கில் இல்லை; எட்டாயிரம்தான். உடனே வந்து உங்கள் மைத்துனியை ஆசீர்வதியுங்கள்' என்று எழுதிவிடு. சிவராமன் மகளைப் பார்க்காமல் சுவரைப் பார்த்துச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார். அவர் கிராமத்துச் சொத்தை விற்றுவிட்ட எரிச்சலில், அவர் வரும்போதெல்லாம் எழுந்திருக்கும் குமார் கண்டுக்க' வில்லை. சாந்தி மீதே அவருக்கு ஒருவித எரிச்சல். இவளும் இப்படித்தான் நடந்துகொள்வாளோ? மாட்டாள். நல்ல வேளையாக அவளுக்குப் பிறகு, அவர் கடமையை நினைவூட்ட எந்த ஜீவனும் இல்லை. சாந்திக்கு ஒரு வழியைக் காட்டிவிட்டால், சிவராமனுக்கு நிரந்தர ஓய்வு கிடைத்துவிடும். திருமண நாள் நெருங்க, நெருங்க, உறவினர்களும் வீட்டை நெருங்கினார்கள். பம்பாய்க்காரி மாப்பிள்ளையோடு வந்திறங்கி னாள். டில்லி மாப்பிள்ளை, "பிள்ளைகளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. வந்து விட்டேன்" என்று முன்னதாகவே வந்து மனைவியிடம் மணிக்கணக்கில் கொஞ்சிக் கொண்டிருந்தார். திருமண வைபவம் எளிய முறையில் தொடங்கியது. ‘ராஜபார்ட் மேளம் வைக்காதது பிள்ளை வீட்டாருக்கு ஒரு குறை. வெற்றிலை பாக்கு தேவையான அளவுக்குக் கொடுக்கப்படவில்லை என்பது உறவினர் வருத்தம். சிவராமனுக்குக் &T函 தீர்ந்துவிட்டதால், அவர் பெயரில் மகன் குமார் அழாக் குறையாகச் செலவழித்தான். கஞ்சன் சிவராமன் மகைைனச் செலவு செய்ய விடாமல் தடுப்பதாகச் செய்தி, மருமகள் மூலம் மாப்பிள்ளை வீட்டார் வரைக்கும் எட்டியது. சிவராமன் குமாரைப் பார்த்தார். அவன் தங்கைக்கு மாமனாராகப் போகிறவரிடம், "ப்ளீஸ், எட்டாயிரம் ரூபாய்தான் புரட்ட முடிந்தது. பெரிய மனசு செய்யுங்கள்" என்று சொன்னான். 'இந்தாருங்கள் செக். நாளைக்கே பேங்கில் என் கணக்கில் உள்ள பத்தாயிரம் ரூபாயில் இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்ல அவனால் முடியவில்லை. டில்லி மாப்பிள்ளை "நான் அப்போதே நினைச்சேன்", என்று பத்திரமாகத் தொலைவில் இருந்து முணுமுணுத்தார். பம்பாய் மாப்பிள்ளை, தன் மாமனார் மோசமானவர் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம் என்று சொல்வதுபோல் பக்கத்திலிருந்தவரைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினார்.