பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாறு கண்ட திசைமாற்றம்

47


தொடர்ந்து கிழக்கு நோக்கி ஒட முடியாமல்,_ இதுபோல் செங்கோணமாகத் திடீரென வடக்கு நோக்கித் திரும்பி விடுகிறது. அது திரும்பும் முனையில்தான் திருவயிந்திரபுரம் இருக்கிறது.

உத்தர வாகினி

இதுவரைக்கும் மேற்கும் கிழக்குமாக இருக்கும் கெடிலம் திருவயிந்திரபுரத்தருகில் தெற்கும் வடக்குமாகக் காட்சி யளிக்கிறது, இதனால், திருவயிந்திரபுரத்திற்கு ஒரு சிறந்த பெருமை வைணவப் பெரியார்களால் கூறப்பட்டுள்ளது. புகழ்பெற்ற வரலாற்றுப் பெருமையும் திருக்கோயில் பெருமையும் உடைய திருப்பாதிரிப் புலியூர், திருவதிகை, திருவாமூர், திருநாவலூர் முதலிய திருப்பதிகள் கெடிலத்தின் வடகரையிலும், திருமாணிக்குழி, சேந்த மங்கலம் முதலிய திருப்பதிகள் கெடிலத்தின் தென்கரையிலும் உள்ளன. இந்தத் திருப்பதிகளின் அருகே கெடிலம் மேற்கும் கிழக்குமாக ஒடுகிறது. இத்திருப்பதிகள் சைவசமயப் பெருமை பெற்றவை.

கெடிலக் கரையை ஒட்டியுள்ள புகழ்பெற்ற வைணவத் திருப்பதியோ திருவயிந்திரபுரம் ஒன்றே ஒன்றுதான். இந்தத் திருப்பதியில்தான் கெடிலம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒடுகிறது. இது ஒரு பெரிய சிறப்பாம். ஆற்றின் கிழக்குக் கரையில் திருவயிந்திரபுரம் உள்ளது. வடக்கு நோக்கி ஒடும் ஆற்றின் கரையில் இருப்பது ஊருக்கும் ஒரு பெரிய சிறப்பாம். கெடிலம் இங்கே வடக்கு நோக்கி ஒடும் தனிப்பெருமை உடைத்தாயிருப்பதால், ‘உத்தர வாகினி’ என ‘வேதாந்த தேசிகர்’ போன்ற பெரியோர்களால் அழைக்கப் பெற்றுச் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. உத்தரம் என்றால் வடக்கு உத்தர வாகினி என்றால், வடக்கு நோக்கி ஒடும் ஆறு.

கெடிலம் உத்தரவாகினி எனச் சிறப்பிக்கப் பெற்றிருப்பதிலுள்ள மறைபொருள் (இரகசியம்) யாது?

தமிழ்நாடு, இந்தியத் துணைக்கண்டத்தில் வரவரக் குறுகிக் கொண்டிருக்கும் தென்கோடியில் இருப்பதாலும், தமிழ் நாட்டின் நிலப்பகுதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சரிந்திருப்பதாலும் தமிழ் நாட்டு ஆறுகள் மேற்கிலே மேற்குத் தொடர்ச்சி மலையிலே தோன்றிக் கிழக்கு நோக்கி ஓடி வங்கக் கடலில் வந்து கலக்கின்றன. இந்த நிலையில் வடக்கு நோக்கி ஒடுவதற்கு வாய்ப்பில்லை. கிழக்கு நோக்கி ஒடும் ஆறுகளும் சில இடங்களில் வடக்கு நோக்கியோ தெற்கு நோக்கியோ வளைவதுண்டு. அந்த வளைவும் செங்கோணமாக இருப்பது