3. நாட்டைக் கெடுப்பவை
ஆயிரங் காலமாய் ஆடி வரும்
பிசாசுத் தனங்கள் பற்பலவும் பேய்வாய் காட்டிச் சீறுது பார்
முண்டி முரண்டிப் பின் வருகுது பார்!
-விட்மன்
உலக கிலேயே பொதுவாக இழிதகைமைகள் மிஞ்சிய தாய் காணப்படுகிறது. என்றாலும் சில நாடுகளில் மக்க களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது. இன்னும் பல
முயற்சிகள் செய்யப்படுகின்றன, வாழ்க்கை வசதிகளை
வளப்படுத்திக் கொள்வதற்காக.
ஆனால், இந்தியாவின் நிலை மகாமட்டமாகிக்கொண்டு வருகிறது. தமிழகத்தின் நிலைமையோ மிக மிக மோச மாகி வருகிறது. கீழ்திசையின் ஜோதி என்று இந்தியாவைப் பற்றி பெருமை பேசுவதில் பயனில்லை. இன் ைற ய நாட்டு வாழ்வுக்கு வழிகாட்டுவதாயில்லை. எதிர்காலம் பற்றி எண்ணினால் மகிழ்வு ஏற்படுவதாயில்லை.
தமிழ் காட்டின் விஷயமும் அதற்கு மேலாகத் தான் இருக்கிறது. கடல் கடந்து உயர் கலாச்சாரத்தை விதைத்த வர்கள் தமிழர் ; பிற நாட்டினர் காடுகளில் மாடோட்டித் திரிந்த காலத்தில் கூட, தமிழ் மக்கள் நகரமைப்புகளை நன்கு வகுத்து நாகரீகம் வளர்த்து வந்தார்கள்; இமயத் திலே கொடி நாட்டினார்கள் என்பதெல்லாம் சரிதான். சரித்திரம் பொய் சொல்லவில்லை. ஆனால், பழம் பெருமை