இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4. கொடு கல்தா!
அமைதியற்றவன் நான். மற்றவர்களையும் அ வ் விதமே ஆக்குகிறேன் என்பதை நானறிவேன். அபாயம் நிறைந்த, சாவு படிந்த கருவிகள் என் சொற்கள் என்பதை நானறிவேன். ஏன் ? அர்த்தமற்ற நம்பிக்கைகளை, சம்பிரதாயம் என்று தடித்துப் போன அபத்தக் கட்டுப்பாடுகளை நான் எதிர்க்கிறேன்.” -வால்ட் விட்மன் அறியாமைதான் இன்றையச் சிறுமைகள், இழி நிலை கள் அனைத்துக்கும் காரணம். ஆகவே, அறியாமையை அகற்ற முயலுங்கள், முதலில். அறியாமையை வளர்க்கிற பண்புகளுக்கு சீட்டுக் கொடுத்து விடுங்கள். அந்தகாரத்தைப் பரப்புகிற பண்பு களின் அந்தஸ்து எவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும் கவலையில்லை. அவற்றை உதைத்துத் தள்ளுங்கள் சிறுமைகள், சூழ்ச்சிகள், போட்டி, பொறாமைகள் அனைத்தையும் அகற்றி உழையுங்கள். மனிதரிடையே
பேதங்கள் வளர்க்கின்ற பாகுபாடுகள் எதாயினும் சரியே, அவற்றை நெட்டித் தள்ளுங்கள்.