உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொடு கல்தா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-28- மனிதனை மனிதனாக வாழவிடாத செயல்களை, அச்செயல்களை பூஜிப்போரை, விர ட்டியடியுங்கள். எல்லோரும் மனிதர்களே. அனைவருக்கும் வாழ வசதி வேண்டும். வாழ்க்கை வசதிகளைத் தேடிக்கொள்வதற்கு எல்லோருக்கும் சந்தர்ப்பம் அளிக்கவேண்டும். அதற்கு ஆவன செய்யக் கூடியவர்கள் ஆள்வோர்களாகட்டும்; வழிகாட்டிகளாக ட்டும்; தலைவர்களாகட்டும். அதில்லாமல் சுயநலத்துக்காக மக்களின் நலனை பலி யிடத் தயங்காதவர்களை அவர்களிருக்கும் போலி பீடத்தி லிருந்து இழுத்துத்தள்ளுங்கள். அதிகார ஆசையும், பத விப் பித்தும் கொண்ட - எதையும் சாதிக்கத் திராணி யற் றுப்போகிற - பெரிய மனிதர்களை (அவர்கள் ஆரம்பத் தில் நல்லன செய்திருந்தாலும், இப்போது உருப்படியாகச் செயலாற்ற இயலாதவர்களாகிவிடில்) மூலையில் உட்காரும்படி செய்யுங்கள். புதுமைக்கு, புதுயுக அமைப்புக்கு ஆர்வமாகப் பாடு படுகிற - உழைக்க விரும்புகிற, உழைக்கத் தயாராக இருக்கிற - திறமைசாலிகளுக்கு, இளைஞர்களுக்கு சகல துறைகளிலும் இடமளிக்க முன்வரட்டும் மக்கள். சந்தர்ப் பம் அளிக்கத் தடையாக இருப்பவர்களுக்கு க ல் தா . கொடுங்கள் : பொருளாதார பேதங்களுக்குச் சமாதி கட்டவேண் டும். பொருள் பலத்தைத் துணைகொண்டு - திறமை யில்லாவிட்டாஅம் - அட்டகாசம் புரியத்துணிகிறவர்களை ஒதுக்கிவிடுங்கள். அவர்களது அயோக்கியத்தனத்துக்கு கல்தா கொடுங்கள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/28&oldid=1396058" இலிருந்து மீள்விக்கப்பட்டது