5. எதிர்காலத்திலே!
இறந்த காலத்தைப போற்றுவோர் எண்ணிலர்; நிகழ் காலமே! நான் உன்னைப் போற்றுகிறேன். வருங்கால நாட்களே, உன்னில் எனக்கு நம்பிக்கை
உண்டு. - உறுதியாய் விஞ்ஞான ரீதியாய் திட்டமிட்டு வேலை செய்வோர். நிகழ் காலத்திடம் நட்புக்கொண்டு, நலம் மிகு எதிர் காலம் நோக்கிச் செல்ல முடியும், ! -வால்ட் விட்மன் நம் நாட்டில் இன்றைய நிலை பயங்கரமானதாகத் தான் இருக்கிறது. யுத்தகாலத்தில் அனுபவித்தது பெரி தல்ல. இப்பொழுதுதான் நாட்டு மக்கள் கஷ்டங்களை எண்ண உணரத் தொடங்கியுள்ளனர். யுத்த காலத்தில் மக்களுக்கு உற்சாகம் தந்த பணப்பெருக்கம் ஒடுங்கிவிடவே, திடீ ரென்று ஏற்பட்டது போலிருக்கிறது. தற்சமயம் நிலவுகிற பொருளாதார மாந்தம். எங்கு பார்த்தாலும், எத் துறைகளிலும், வறட்சியே காணப்படுகிறது. பிலினஸ் டல் - இதுதான் எங்கும் காதில் விழுகிறது. சாதா ரணமாக பணம் ஓடிப்புரளுகிற பிஸினஸ்களில் கூட பணம் தண்ணீர் பட்ட பாடு நிலைமாறி, ரொம்ப், டிரை' என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பணப்புழக்கம் குறையவே வேலையிலிருக்கும் ஆட் கள் வீட்டுக்கு அனுப்பும் திருப்பணி அதிகரிக்கிறது: வேலையில்லாமல் இருப்பவர்களோடு இவர்களும் சேர்ந்து வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் விளைகிறது. -