-38- நாட்டிலே நிலவுகிற அறியாமைக்கு கல்தா கொடுக்க வேண்டியதுதான் ஆளவந்தோரின் முதல்வேலை நாட்டுக்கு வழிகாட்டத் துணிகிறவர்களின் முக்கியப் பொறுப்பு என்று மீண்டும் குறிப்பிடுகிறேன். தமிழ் நாட்டினருக்கு தங்கள் தாய் மொழியில் தம் பெயரைக் கூட எழுதத் தெரியாத நிலை இன்னும் நீடிப்பது இழிவு இல்லையா? இதை ஒழிக்க சர்க்காரும், தனிப்பட்ட கட்சிகளும் ஏன் தகுந்த திட்டங்களிட்டுச் செயல் புரியக் கூடாது ? நாட்டிலே தாய்மொழியே சரியாகப் பரவாத போது எல்லாருக்கும கல்வி அறிவு புகட்டத் திட்டங்களிடாத போது, இந்தி போன்ற அயல் மொழிகளைக் கற்பிக்கத் திட்டமும் அது குறித்துப் போராட்டமும் நடைபெறுவது அழகல்ல. நாட்டிலே நிலவிவரும் பலவிதமான மூடநம்பிக்கைகளுக்கும் சீட்டுக் கிழிக்கப்பட வேண்டுமானால், எல்லோ ரும் அறிவொளி பெற்றிருக்க வேண்டும். மூட நம்பிக் கைகளை அகற்றப்போதிய துணி வு ஒவ்வொருவரும் பெற்றாக வேண்டும். அனாதிகாலமாக இருந்து வருவது; ஆதிசிவன் பெற்றுவிட்டது, வேதவியாசன் வகுத்துத் தந் தது, அகத்தியன் அடிகோலியது; இவற்றை எப்படி விட முடியும்-நேற்று. முளைத்த குழந்தை நீ உனக்கு என்ன தெரியும் - என்பனபோன்ற சப்பைக் கட்டுகள் காலத் துக்கும் கருத்துக்கும் பொருந்தா இத்தகைய பழக்க வழக்கங்களால் கால விரயமும் பொருள் கஷ்டமும்தான் விளைகின்றன என்பதை கவி பாரதியார் அழகாக விளக்கி யிருக்கிறான்.
பக்கம்:கொடு கல்தா.pdf/38
Appearance