இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
சகுந்தலா
செத்தேன். அம்மா, அப்பா, என்று வேதனையினால் ஒலமிடும் அபலையின் அழுகுரல் அவன் காதுகளில் விழும்.
'பக்கத்து வீட்டில் என்ன, கொலை கிலை நடக்கிறதா?' என்று பதறி எழுவான் ரகுராமன். இருட்டோடு இருட்டாக உடல் நடுங்கத் தனது படுக்கையில் உட்கர்ர்ந்திருப்பான். அவனால் என்னத்தைச் சாதித்துவிடமுடியும்? வேண்டுமானால் இந்தப்பக்கத்திலிருந்து அவனும் 'கூவேகூ' என்று கூச்சலிடலாம். தெருவிலுள்ளவர்கள் அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றுதான் நினைப்பார்கள். அதனால் அவன் அத்தகைய அசட்டுத்தனக்காரியம் எதையும் செய்துவைக்கவில்லே.
ரகுராமனுக்கு ரொம்பக் கஷ்டமாகத்தானிருந்தது. அடுத்தவீட்டில் அமைதி யில்லாமல் போய் தனக்குக் கிடைத்துள்ள சுகவாசம் சிதைந்துவிடும் என்று முன்பு அஞ்சினன். ஆனால் இப்பொழுதோ அங்கு பகலில் நிலவிய ஆழ்ந்த அமைதிதான் அவனுக்கு வேதனை தந்தது, நாலுவீடுகளைப் போல ஆரவாரமும் கலகலப்புமாக இருந்தால் கவலேயேயில்லேயே! இதில் ஏதோ மர்மம் இருப்பது போலல்லவா தோன்றுகிறது என்று நினைத்தான் அவன்.
அடுத்தவீட்டு மர்மத்தை ஆராய்ந்து தெளிவுபடுத்திக் கொள்ள என்ன செய்யலாம் என்பதே பெரிய விசாரமாகிவிட்டது ரகுராமனுக்கு. சந்தர்ப்பம் அவனை வெகுகாலம் ஏங்கிக் கிடக்கும்படி விட்டுவிட வில்லை.
—2—
'அடுத்த வீட்டுக்கு யார் வந்தால் என்ன; எவர் போனால் நமக்கென்ன! நாம் நமது உரிமைகளை ஸ்தாபிக்க வேண்டியதுதான். இத்தனை நாள் வரை விட்டு வைத்திருந்ததே தப்பிதம்தான்' என்று நினைத்தான் ரகுராமன்.
பக்கத்து வீட்டிற்குப் புதிதாகக் குடித்தனம் வந்ததும் ரகுராமன் தானாகவே தனது பழக்கங்களை மாற்றிக் கொண்டான். முன்பெல்லாம் அவன் பின்புறத்துத் தோட்டத்தில் மரத்தின் குளிர் நிழலில் அதிக நேரம் தங்கியிருப்பது வழக்கம். மற்றவர்களுக்கு அதனால் தொல்லை ஏற்படக் கூடாதே என்ற எண்ணத்துடன் அவனாகவே அதைக்