உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சகுந்தலா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 35 தெரிந்து கொண்டே தான் பேசிள்ை அவள். அவனும் உணர்ந்து கொள்ளட்டுமே என்பதற்காகத் தான் பேசினுள். பாதாளக் கரண்டியையும் கயிறையும் கையில் பிடித்து நின்ற ரகுராமன் துணிச்சலாக ஒரு காரியத்தைச் செப்து விட்டான், தேவை யில்லாத போது தானுகவே துணிந்து ஒலி பரப்பின்ை: போட்டாலும் போடும். நான் நட்ட செடி யைப் பிடுங்கி யெறிந்த கை தானே ! நான் எடுத்த வாளி யைத் தூக்கி எறியாது என்று எப்படிச் சொல்ல முடியும் ? குகுங்’ என்ற மணிப்புருச் சிரிப்புத்தான் தெறித்து விழுந்தது அந்தப் பக்கத்திலிருந்து. அவள் பதில் சொல் வாள். சொல்ல வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கவு மில்லேயே ! - ரகுராமன் வீட்டினுள் சென்ருன். அவன் உள்ளம் இனிய இறகு பெற்று மோகன நிலவொளியிலே நீந்திக் களிப் பெய்துவது போல் குதுகலித்தது. அடுத்த வீட்டுக்காரி யைப்பற்றிக் கசந்து புகைந்து கொண்டிருந்த அது திடீ ரென்று அவளேப் பற்றிப் புகழ் பாடத் தயாராகி விட்டது. இன்னும் அவளே நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை. அவ ளது பூரண உருவை, அவள் அழகை நன்கு கண்டு களிக்கச் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லே. அதை யெல்லாம் பற்றி அவ்வேளையில் அவன் கவலேப் படவில்லே. அவளுக்கு உதவி செய்து, அவள் முன்பு செய்த தவறைச் சுட்டிக் காட்டியாயிற்று என்பதில் அவ னுக்கு மிகுந்த திருப்தி. அவன் குதுகலம் கரை கொள்ளா மல் பொங்கிப் பிரவகித் திருக்கும், அவள் மட்டும் குறும்புக் குரலிலே பதில் சொல்லி யிருந்தால் அவள் ஏதாவது சொல்லியிருக்கலாம். போட்டு விட்டால் தான் என்ன ! சிரமமில்லாமலே எடுக்கும் திறமையுள்ள (பரோபகாரி தான் பக்கத்திலேயே இருக்கிருரே என்று சொல்லலாமே. அவள் சொல்லக் கூடியவள்தான். ஏனே சொல்லவில்லே!-இது வருத்தமளித்தது அவனுக்கு.

படித்த பெண்ணுக யிருந்தால் நான் செய்த உதவிக்காக தேங்ஸ் என்ருே, வந்தனம் என்ருே, அல்லது நன்றி என்ரு வது சொல்லியிருப்பாள். இவள் படித்தவளில்லே ' என்று நினைத்தான் அவன். -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/37&oldid=814788" இலிருந்து மீள்விக்கப்பட்டது