உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சகுந்தலா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 45° காரி அவரது கழுத்தை அமுக்கிக் கொலே செய்திருப்பாளோ என்று எண்ணினுன் அவன். அவனுல் எதையுமே தீர் மானிக்க இயல வில்லே சே, அடுத்த வீட்டிலே இந்தச் சனியன்கள் குடிபுகுந்த நாள் முதலாக என் அமைதியே காச மாகிவிட்டது. பெரிய தொல்லேயாகப் போச்சு, எழவு சே' என்று குமைந்தான் அவன். விடிவதற்கு இன்னும் ரொம்ப நேரம் கிடப்பதாகத் தான் தோன்றியது. எங்கும் அமைதி தான் கவிந்து கிடந்தது. விடிவின் தூதர்கள் போல் தனிக் குரல் கொடுக்கும் ஒன்றிரு. காக்கைகள் கூட இன்னும் எழுந்திருக்க வில்லை. குளிர் லேசாகத் தலே காட்டியது. அடுத்த விட்டிலும் ஆழ்ந்த அமைதியே நிலவியது. ” #. அந்த அமைதி தான் ரகுராமனே எண்ணுதன. வெல்லாம். எண்ணிக் குழம்பும்படி செய்தது. அவள் கொலே செய்யத் துணிவாளா என்ன? அவளேப் பார்த்தால் அப்படித் தோன்ற வில்லையே! என்று நினைத்தான். அவள் என்ன செய்வாள் அல்லது செய்ய மாட்டாள் என்று சொல்வதற்கில்லே. பச்சைச் செடிகளே - நட்டுத் தண்ணிர் ஊற்றி வைத்ததை - பிடுங்கி எறிந்தவள் தானே : வீட்டிற்குள்ளே பதுங்கிக் கிடப்பவள் போலிருந்து திரு விழாக் கூட்டத்திலே பகட்டித் திரிந்தவள் தானே! பழி வாங்குவதற்காக அவள் - ஆதார மில்லாமலே இஷ்டம் போல் அவள் மீது பழி' சுமத்துவது பாவம்; அவர் ஏன் கத்தினரோ என்ற எண்ண மும் எழாமலில்லே. தன்னுணர்வை மறக்கடித்துத் தூக்கம் கவ்விக் கொள்ளும் வரை எண்ணக் குழப்பத்திலேயே மிதக் தான் அவன். இரவில் அடிக்கடி தூக்கம் கெட்டதனுல், விடிந்த பிறகும். கூட வெகு நேரம் வரை தூங்கி விட்டான் அவன். விழித் தெழுந்ததும் பரபரப்புடன் காரியங்களேச் செய்வதில் ஈடு பட்டிருந்தால் இரவு நிகழ்ச்சிகளைப் பற்றி கினேவு அசைப் போட அவனுக்கு ஒய்வு கிட்டாமலே போயிற்று. பக்கத்து விட்டில் எவ்விதமான ஆரவாரமும் ஏற்படாமலிருந்ததன. ல், அங்கு விபரீதமாக எதுவும் நிகழ்ந்துவிட வில்லை என்று நிச் சயமாய் தெரிந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/47&oldid=814799" இலிருந்து மீள்விக்கப்பட்டது