உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மாநகர்ப் புலவர்கள்

சிலரின் ஊர்ப்பெயர்களே மட்டுமே உணர்தல் இயலும். அவ்வாறு அப்பெயர்கொண்டு நோக்கியவழி, புலவர்கள் பிறந்த பெருமைசால் ஊர்களாக நூறு ஊர்ப்பெயர்களே அறிகிருேம். அவ் வூர்ப்பெயர்களேத்தான்் அறிகிருேமே யன்றி அவை பாண்டுள்ளன்; அவற்றின் வரலாறு யாது என்பனவற்றை அறிதற்கில்லை. அவ்வூர்ப் பெயர்களுள் சிலவே ஊர்ப் பெயர்களாக உள்ளன ஏனேய, உண்மை யில் ஊர்ப் பெயர்கள்தாமா? அல்லது வேறு சிறப்புக் குறித்து, அப்புலவர் பெயரோடு வந்து வழங்கும் அடை மொழிகளா என்று ஐயுறத்தக்கனவாகவும் உள்ளன. புல வர்களின் வரலாறு, பெண்பாற் புலவர்கள், உவமையாற் பெயர்பெற்ருேர், காவல பாவலர், வணிகரிற் புலவர்கள், கிழார்ப்பெயர்பெற்ருேர், உறுப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்ருேர், மதுரைப் புலவர்கள் என்ற பல்வேறு தலைப் பின்கீழ் வகைப்படுத்தி உரைக்கப் பெறுவதால், அவ்வத் தலைப்பின்கீழ்ச் சில புலவர்களின் ஊர்ப்பெயர்கள் அடங்கி விடும். அவ்வாறு அடங்காத ஊர்களில் வாழ்ந்தார் வரலாறு மட்டுமே ஈண்டு உரைக்கப்பெறும். இவ்வாறு ஆராய்ந்து கொண்ட எழுபத்தேழு ஊர்களில் வாழ்ந்த நூற்றுப்பத்துப் புலவர்களின் வரலாற்றினே "மாநகர்ப் புலவர்கள்' என்ற வரிசையிற் கூறத்தொடங்கி, அவ் வரிசையுள் இரண்டாவது நூலாகிய இதன்கண், பதினறு ஊர்களில் வாழ்ந்த முப்பது புலவர்களின் வரலாறு உரைக் கப்படுகிறது. இந்நூலால் அறியப்படும் புலவர்களின் ஊர்கள், (1) கச்சிப்பேடு, (2) கடம்பனூர், (3) கடியலூர், (4) கருவூர், (5) கல்லாடம், (6) கழாத்தலே, (7) கழார், ! (8) கள்ளம்பால், (9) கள்ளிக்குடி, (10) கள்ளில், (11) காப்பியாறு, (18) காவிரிப்பூம்பட்டினம், (18) கிடங்கில், (14) குடவாயில், (15) குதிரைத்தளி, (16) குமட்டுர் முதலாயினவ்ர்ம். . . . . - . . . . . ...