2 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் இடத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டு, தங்கள் ஸ்வீட்நத் திங் உரையாடலுக்கு அவை இடையூறாக இருப்பது போல், கடலோரம் பார்த்து, தங்கள் மேனிகளை நகர்த்திக் கொண்டார்கள் , செல்வம் வீறிட்டு எழுந்தான். அவன் கரத்தை கீழே இருந்தபடியே செல்லமாக இழுத்த பானு, அவன் பார்வை பட்ட இடத்தில் நடந்துகொண்டிருந்த விபரீத சம்பவத்தைக் கண்டு, அய்யயோ’’ என்று கத்தியபடியே, அவன் கையை விடுவித்தபோது, விடுபட்டவன் ஒரே ஒட்டமாய் ஓடினான். காலை இடறிய கல் ஒன்றை எடுத்துக்கொண்டே மூச்சைப் பிடித்தபடி, முன் நெஞ்சை நிமிர்த்தி, நாய்ப்பட்டாளத்தின் மீது எறிந்தான். அவனைக்கூட குரைத்துப் பார்த்த நாய் கள், இறுதியில், ஆட்டுக்குட்டியைக் கறுவியபடியே பார்த்த வண்ணம், ஒட்டமெடுத்தன. செல்வம் திரும்பி நடக்கப் போனான் இதற்குள் மே மே' என்றபடி அந்த ஆட்டுக் குட்டி அவனையும், தொலைவில் நாக்குகளை தொங்கப் போட்டுக்கொண்டிருந்த நாய்களையும் மாறி மாறிப் பார்த்தது. அவன் அதன் உயிர் அச்ச உணர்வுகளைப் புரிந்து கொண்டவன்போல் அவன் நடக்காமல் நின்றபோது, எங்கிருந்தோ ஓடிவந்த தாய் ஆடு, தன் குட்டியை வயிற் றுக்குள் அடைக்கலமாக்கி, ஏதோ நடந்திருக்கிறது என் பதைப் புரிந்ததுபோல் தலையை நிமிர்த்தி சுற்றுப்புறத்தை நோட்டம் விட்டது. செல்வம், தன்னை யறியாமலே, அந்த வாயில்லா ஜீவன் கள் பக்கம் போனான். திடீரென்று இருபது வருடத்திற்கு முன்பு கிராமத்தில் தன்னை படிப்பில் ஜெயிக்க முடியாத சில பெரிய இடத்துப் பையன்கள், அவனை வாயால் திட்டி, கையால் குதறப்போனதும், ஊர்ப் பெரியவர் ஒருவர் அவர் களைத் துரத்தியதும், விஷயத்தைக் கேள்விப்பட்டு வந்த அம்மா, அவனைத் தன் வயிற்றோடு ஒட்டிப்பிடித்து, தலை யைக் கோதி விட்டதும் நினைவுக்கு வந்தது. ஆட்டில்
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/12
Appearance