கட்டுப்பட்டால் 9 கொண்டபின், தலைகவிழ்ந்து கடலை நோக்கி நடக்கிறான். இதை சற்றும் எதிர்பாராத அவள் தொப்பென்று மணலில் உட்கார்ந்தாள். குறுகி வைத்த கால்களில், முகத்தைப் புதைத்து, பிடறியில் கை பின்னியபடியே, உயிரற்றவள் போல் கிடந்தாள். சிறிது தூரம் நடந்த செல்வம், திரும்பிப் பார்த்தான். அவனால் தாளமுடியவில்லை. ஒரே பாய்ச்சலில் ஓடிவந்து, அவளின் அருகே வேக வேகமாய் உட்கார்ந்து, அவள் முகத்தை பானு...பானு' என்று சொன்னபடியே தொடப்போனான். அவளோ, அவன் கையை பலவந்தமாய் விலக்கினாள். அவனை நேருக்கு நேராய் பார்த்தாள். நீங்கள் ஒரு ஆண் மகனா?' என்றுகூட கேட்கப்போனாள். ஆனால் நிர்மலமான முகங்காட்டி, அப்பாவிக் குழந்தைபோல், மோகனமாய், கேள்விக்குறியாகிய அவனைப் பார்த்ததும். அவளால் கேட்கப்போனதைக் கே ட் க முடியவில்லை. ஆனாலும் அழுத்தம் திருத்தமாகக் கேட்டாள். நீங்க யார்? நான் யார்? என்னைத் தொடாதீங்க... என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லன்னுதான் எழுதப் போறேன். சாகிறதே சாகிறாள்...எதுக்காக லட்டர் எழுதி வச்சுட்டு சாகணுமுன்னு நினைக்கிறீங்களா... என் தற் கொலையை, கொலையாய் நெனச்சு போலீஸ் உங்களுக்கு தொல்லை கொடுக்கப்படாது பாருங்க, அதுக்காகத்தான். நீங்க போகலாம்!'" நானும் அதைத் தான் சொல்ல வந்தேன். எழுந்திரு போகலாம்: ஒன்னைத்தான் பானு, நான் உன்னோட வாறேன் எழுத்திரு! ஒன்னைத்தான்...ஒன்னோடு தற் கொலை செய்ய வாறேன்னு சொல்ல... ஒன் வீட்டுக்கு வாறேன்னு சொல்றேன்!' இரண்டு கரங்களையும், பக்கவாட்டில் சிறகுகள்போல் மடித்து வைத்த வண்ணத்துப் பூச்சிபோல் கிடந்த பானு மெள்ள மெள்ள முகத்தை மெல்ல மெல்ல தூக்கின்ாள்.
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/19
Appearance