இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
24 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் பழியுரை. மனந் திறந்து பேசிய ஒருவரிடம்-வாஞ்சையோடு பார்க்கும் ஒரு குடும்பத்திடம்-உண்மையையே மறைப்பது பஞ்சமா பாதகங்களில் படுபாதகம். நான் வேறு ஜாதிக் காரன் என்று சொல்லி, இவர்கள் என்னை உதாசீனம் செய்தால்... நான் என்னாவது பானு? என்னாவது? இது இருவர் பிரச்சினைதான். ஆனாலும் நம்பிக்கை பிரச்சினை யும்கூட. ஜாதிகள் போலிதான். அதற்காக அந்த போலித் தனத்தை மறைப்பதும் ஒரு போலி தானே ! உண்மையைச் சொல்லத் தான் வேண்டும். அது சுட்டாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். என்னை இந்த வீட்டுக்கு தகப்பன் ஸ்தானத்தில் வைப்பதாகக் கூறும் ஒரு பெரியவரிடம் நான் பொய்யுரைக்கக்கூடாது. தப்பு... பெருந்தப்பு! செல்வம் எழுந்தான். தணிகாசலத்தைப் பார்த்தான். பிறகு ஒப்புவித்தான்.
- இதுவரைக்கும் ஒரு உண்மையை நான் சொல்லாமல் இருந்ததுக்காக நீங்க என்னை மன்னிக்கணும். எனக்கு ஜாதி களில் நம்பிக்கை கிடையாது. ஜாதிகள் இருக்கென்று சொல் வாறும் இருக்கின்றானே' என்ற பாரதிதாசன் வரிகளை அடிக்கடி சொல்லிக்கொள்பவன் நான்; அந்தப் பின்னணியில் தான் இப்போ சொல்றேன்: நான் உங்க ஜாதியில்ல... வேற ஜாதிக்காரன். அப்பா, ஊர்ல பிறத்தியார் நிலத்துல கூலி வேலை செய்துட்டு இருந்தவரு. அஞ்சாறு வயசிலேயே என் அம்மா இறந்துட்டார். அதுக்கு ஆறாவது மாசமே அப்பா இரண்டாவது கல்யாணம் செய்துட்டார். எங்க சித் தி என்னை செய்யாத கொடுமை இல்ல; எப்படியோ பல்லை கடிச்சிட்டு எஸ்.எஸ். எல்.சி. வரை படித்தேன். அப்புறம் அரசாங்க ஹாஸ்டல்ல தங்கி எம். ஏ. வரைக்கும் ஒரு வழியாய் படிச்சுட்டேன். நான் ஒரு அனாதை. பானுவுக்கு இது தெரியும், அவள், ! லார், நீங்க எங்க ஜாதின்னே சொல்லுங்க” என்று சொன்னபோது, ஜாதி போலி என் கிறதாலயும், அவங்களோட காதலுக்கு உட்பட்டும் சம்மதிச்