இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கட்டுப்பட்டால் 29 கொசுக்கள்தான் நம் தோழர்கள். வெளியில் இருக்கிற பம்பு தான் நம்மோட ஷவர். இந்தக் கட்டில்தான் நம்மோட டைனிங் டேபிள்..."
- ஏன் அபத்தமாய் பேசுறீங்க. எல்லாவற்றையும் விட்டுட்டு, அப்பாவையும் விட்டுட்டு வந் திருக்கேனே, இதுல இருந்து என்ன நீங்க புரிஞ்சுக்கலியா? இப்போகூட நான் சொல்றேன். நீங்க இல்லாமல் நான் வாழ முடியாது. அதே சமயம் நான் இல்லாமல் உங்களால் வாழ முடியுமுன்னால், சொல்லுங்க, நான் விலகிக்கிறேன்!'
செல்வம், அவள் கரங்களை எடுத்துத் தன் தோளில் போட்டுக் கொண்டான். அவளையே உற்று நோக்கினான். அவளோ அவனை தீர்க்கமாகப் பார்த்தபடி சொல்லுங்க, நான் இல்லாமல் நீங்க வாழ முடியுமுன்னால்...தாராளமாய் விலகிக்கிறேன்' என்றாள். செல்வம், அவளை மார்போடு சேர்த்து, மணிப்புறா வைப் பிடிப்பதுபோல் பிடித்துக்கொண்டான். பானு தேம்பிய படியே பேசினாள்.
- ' என்னைப் பொறுத்த அளவில், நான் சாகிறதாய் இருந்தாலும உங்க மடியில் படுத்தபடியே சாகனும் என் கிறதுதான என் ஆசை, !
e அபசகுனமாய் பேசா தே! " p அப்போ சுபசகுனமான காரியத்துக்கு ஏற்பாடு செய்யுங்க...' g எழுந்திரு.'