முகம் தெரியா மனுசி
17
நடைபெறுகின்றன. அதே சமயம், அழுக்கு வேட்டிகளுக்கு பக்கபலமாக, தலையின் வலது பக்க முன்பகுதியில் குடுமி முடிந்த நம்பூதிரிகளும், இன்னும் சில வெள்ளைச் சொள்ளை மனிதர்களும், கிறிஸ்துவ பாதிரியார்களும் எதிர்த்தரப்பிடம் கோபங்கோபமாய் பேசுகிறார்கள். அவர்களை பின்னால் தள்ளி விடுகிறார்கள். ஆனாலும்
சந்தைக்குள் இருந்த கட்டைவண்டிகள் உடைக்கப் படுகின்றன. கட்டிடங்கள் எரிக்கப்படுகின்றன. தானியங்கள் புகைகின்றன. ஆடுகள் அலறுகின்றன. மாடுகள் அலைமோது கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக .
கரங்களின் மணிக்கட்டுகள் வரை நீண்டு, கழுத்து வரை உயர்ந்து, இடுப்பு வரை வியாபித்த குப்பாயச் சட்டையையும், தோளில் ஒரு துண்டு சேலையுமாய் உரிமையை நிலைநாட்டும் வகையில் அணிந்துக் கொண்டு திரண்டிருந்த கிழ்சாதி பெண்களில் பலர் மல்லாந்தும், குப்புறவும் தள்ளப்படுகிறார்கள். குப்பாயங்கள் கிழிக்கப்படுகின்றன. தோள்சிலை உறியப்படுகிறது. இடுப்பில் கட்டிய சேலைகள் அவி ழ்க்கப்படுகின்றன. நிர்வாணமாய் ஆக்கப்பட்ட பெண்கள், இடுப்புக்கு கீழே இரண்டு கைகளையும் வைத்து பொத்திக் கொண்டு குய்யோ, முறையோ என்று கூப்பாடு போடுகிறார்கள். “ஏசுவே.. ஏசுவே” என்ற ஏகப்பட்ட அலறல்கள். “முத்தாரம்மா, முத்தாரம்மா" என்ற சின்னச் சின்ன முனங்கல்கள். வண்டுகள் போல் ரீங்களிக்கும் அவர்களின் வழக்கமான சத்தம், குண்டுகளின் கோரச்சத்தமாய் குரலிடுகிறது.
இந்தப் பின்னணியில் வெள்ளையும், சொள்ளையுமான ஒரு தடியன், குப்பாயம் போட்ட ஒரு இளம் பெண்ணை இருபக்கமும் கைகளை விரித்துப்போட்டு துரத்துகிறான். அவள் அலறியடித்து அவனை திரும்பித் திரும்பி பார்த்தபடியே ஒடிஓடி, ஒரு திருப்பத்தில் இடறி விழுகிறாள். ராசம்மா நிற்கும் இடத்திலிருந்து பத்தடி தொலைவில் அப்படியே கிடக்கிறாள். துரத்திவந்தவன் அவள் வயிற்றில் உட்கார்ந்து கொண்டு, மார்புக்கும் குப்பாய இடைவெளிக்கும் இடையில் இரண்டு கைகளையும் ஊடுருவ