பக்கம்:சரணம் சரணம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிது. தவம்

வேறு பாடல்களிலும் கூறியிருக்கிறர். திருப்புகழில், ‘த்ரிபுரை செம்பட்டுக் கட்டு நுசுப்பின் திரு” என்று வருகிறது.

இடையை எண்ணியவர் அப்பால் கண்ணே மேலே உயர்த்தி அன்னேயின் திருமார்பைப் பார்க்கிறார். சின்னஞ் சிறியது இடையானலும் அன்னேயின் நகில்கள் மிகப் புெரியனவாக இருக்கின்றன. எல்லா உயிர்களுக்கும் தாயாக இருக்கும் மகாமாதாவாதலால் அவை பெரியன வாக இருக்கின்றன. அவற்றின்மேல் முத்துமாலேயை அணிந்திருக்கிருள். .

பென்னம் பெரிய முலையும் முத்தாரமும்.

அபிராமிபட்டர் பல இடங்களில் இந்த முத்தாரத் தைச் சொல்லுவார். திருத்தனப் பாரமும் ஆரமும்’ (9), “மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை’ (37) முத்து வடங்கொண்ட கொங்கை'(42) என்பவற்றைப் பார்க்க. அம்பிகையின் திருக்கோலத்தைக் கண்டு தியானிப்ப கவர் இப்போது இன்னும் மேல்ே பார்க்கிறர். அன்னேயின் கூந்தலேப் பார்க்கிறார். அது கன்னங்கரிய குழல். அவள் இளமை மாருதவள் என்பதை அவளுடைய பென்னம் பெரிய தகிலும் கன்னங்கரிய குழலும் காட்டுகின்றன. குழ்வில் அம்பிகை பிச்சி மலரை அணிந்திருக்கிருள். கரிய குழ்நிலையில் அம்மலர் எடுப்பாகத் தெரிகிறது.

பிச்சி மொய்த்த கன்னங் கரிய குழலும்

கூந்தலில் மலரை அணிவது கற்புடை மங்கையருக்கு அழகு. அவர்களுடைய மங்கல வாழ்வுக்கு அறிகுறியாக விளங்குவது அது. நித்திய சுமங்கலியாக அன்னே தன் குழலில் மலரை அணிந்திருக்கிருள். பிச்சி மலர்க் கிகாந்தளபாரை’ என்பது திருப்புகழ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/25&oldid=680601" இலிருந்து மீள்விக்கப்பட்டது