உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகக் கலையின் சேவைக்காக நாடகம் என்ருெரு மாதப் பத்திரிகை தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். என்னிடம் சகோதர அன்பும், எனது வளர்ச்சியில் அக்கறையும் காட்டி வந்த அவ்வை டி. கே. சண்முகம் அந்தப் பத்திரிகையின் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அழைத்த வாறிருந்தார்.

எதை ஏற்பது, எதை விடுப்பது என்று மாதக்கணக்கில் குழம்பிக் கொண்டிருந்த எனக்கு வழிகாட்ட கண்ணன்' வந்து உதவிஞர் துறையூர் அ. வெ. ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் (அவர் கண்ணன்' என்ற புனைப்பெயரும் கொண்டிருந்தார்). சென்னைக்கு வந்து, என்னைக் கையோடு அழைத்துப் போய், கிராம ஊழியன் அலுவலகத்தில் விட்டுவிட்டார்.

நசன் துறையூர் போய்ச் சேர்ந்ததனுல் நாடகம்' என்ற கலைப் பத்திரிகை கருவிலேயே சாக தேர்ந்து விட்டது என்றும், அதைக் கொலை செய்த பாவம் என்னையே சேரும் என்றும் டி. கே. சண்முகம் ரொம்ப காலம் வரை சொல்லிக் கொண்டிருந் தார். இருக்கலாம்.

ஆயினும், நான் துறையூர் சேர்ந்தது கிராம ஊழியன்’ வளர்ச்சிக்கும், எனது எழுத்துலக முன்னேற்றத்துக்கும் கிட்டிய நல்வாய்ப்பு ஆகவே அமைந்தது.

17-வது இதழ் முடிய, கையடக்கமான- வசீகரமான-சிறிய அளவில் (கிரெளன்சைஸில்) வெளிவந்த பத்திரிகை பின்னர் பெரிய அளவும் (டெம்மி சைஸ்) (ஆனந்த விகடன்’ மாதிரி) தோற்ற மாறுதலும் ஏற்றுக்கொண்டது. (கலா மோகினி' ஆரம்பத்தில் விகடன் அளவிலிருந்து, பிறகு சிறிய அளவுக்கு மாறியது.)

‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்" என்பதை மூல வாக்கியமாகக்

28 / சரஸ்வதி காலம் C)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/34&oldid=561114" இலிருந்து மீள்விக்கப்பட்டது