552 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய
அழகு விளங்க, மட மயில் இயல் தக - மடப்பம் மிக்க மயிலின் இயல்பு பொருந்த, மாதிரம் புதைத்து வளைந்து புகல் மேகம் வன்மை இருள் மூழ்க - திக்குக்களிற் பொதிந்து மூடிப் புகுதலை யுடைய மேகத்தின் மிகுந்த இருள் தன்னிடத்துப் படிய, வரி அளி துகைந்த கதுப்பு இனிது அடைச்சி - இரேகைகளையுடைய வண்டினங்கள் நெருங்கிய கூந்தலைச் செவ்விதாக அலங்கரித்து,
எட்டாரைச் சக்கிர பந்தம்
வடி வாள் வளவன். - வடித்துக் கூர்மையாக்கிய வாளினையுடைய சோழனாகிய, கன்னி துறைவன் - கன்னியாகுமரி நீர்த் துறையினையுடைய மன்னனது, கனகம் சிலம்பே மன்னும் . பொன்மயமாகிய மலையினிடத்துப் பொருந்தி நிற்புள் (எ - று.) வரியளி - வரிப்பாட்டினையுடைய வண்டுமாம். மலர் மலி சோலையின் அழகும், மடமயிற்றோகையின் வனப்பும், மேகத் தின் இருட்சியும் பொருந்தக் கூந்தலைப் புனைந்து தலைவி கனகச் சிலம்பில் மன்னுவள் என்க. -
இக்கவி, எட்டாரைச் சக்கிரத்தில் அமையும்போது, நடுவில் 'க' என்னும் எழுத்து நிற்பக் குறட்டில் 'அறமே தனமாவது' என்னும் தொடர் புலப்பட ஒவ்வோர் ஆரின் மேலும் அவ் வாறு எழுத்துப் பொருந்தச் சுற்று வட்டச் சூட்டில் முப் பத்திரண்டு எழுத்துக்கள் கிடப்பது காண்க.