இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பகுதி). திரிபங்கி. 569
என்று இன்னுமொரு வெண் பாவாகவும் படிக்கப்பட்டுத் திரி பங்கியாயிற்று.
இது போலச் "சத்த பங்கி", "நவ பங்கி" ச் செய்யுள்களும் உள;
அவையிற்றினை வந்துழிக் காண்க.
இச்செய்யுட்குப் பொருள்:-நன்மை புங்கவன்மால் காணா புலவுடைய கம் கரா - நன்மை மிக்க பரிசுத்தனாகிய நான்முகனும் திருமாலும் கண்டறியாத புலால் நாற்றம் வீசும் கபாலத்தை ஏந்தும் கையினையுடையாய்!; கோண் ஆகலா மதி சேர் கோடீர- வளைவு பொருந்திய பிறைச் சந்திரன் பொருந்திய சடை முடியை உடையாய்! ;சங்கரா - சுகத்தைச் செய்பவனே! ;சோண் அசலா-பொன் மயமாகிய மலையை இடமாகக் கொண்டவனே; சலம். ஏதோ-கோபம் யாதோ? ;சங்கம் தா - (யாமிழந்த) சங்கு வளையல்களைத் தா; பூண் ஆரம் தா - பூண்டிருந்த மாலைகளைத் தா; ,மேகலை தா (கழுவியொழிந்த) மேகலாபரணத்தைத் தா. (எ-று)
இது பெண்பாற் கைக்கிளை; தலைவி கூற்று, பாங்கி கூற்றுமாம்.