510 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம் 21.
பிறிதுபடு பாட்டு
, அடி தொடைகளை வேறு படுத்தலால் முன்னைய நிலை மாறி வேறொரு செய்யுளாகும்படி பாடப்படுவது பிறிதுபடு பாட்டாகும்.
இதற்கு உதாரணம்:
"தெளிவருங் காதலிற் சேர்ந்தோர் விழையும் பரிசுகொண்டு வரியளி பாட மருவரு வல்லி யிடையுடைத்தாய்த் திரிதருங் காமர் மயிலிய லாயநண் ணாத்தேமொழி யரிவைதன்னேரென லாகுமெம் மையயா மாடிடமே" (௪௪)
இதன் பொருள் :
ஐய - ஐயனே! தெரிவு அருமை பரிசு கொண்டு -அகத்தில் உள்ளார் புறத்தில் உள்ளார்க்குப் புலப் படாத தன்மையையுடையதாய், காதலில் சேர்ந்தோர் விழையும் பரிசு கொண்டு- தன்னிடத்து விடாய்த்து விருப்பத்தோடு சேர்ந் தவர்கள் விரும்பும் தன்மையோடு, வரி அளி பாட-இரேகை களையுடைய வண்டினங்கள் ஒலிக்க; மருவரும் வல்லி இடை உடைத்தாய் - மணம் பொருந்திய பூங்கொடிகளை இடையிடையே உடையதாய் (விளங்கும்), எம் ஆடு இடம் - யாங்கள் விளையாடும் சோலையாகிய இடம்; திரிதரும் காமர் மயில் இயல் ஆயம் நண்ணா - ஆண்டுச் சஞ்சரிக்கும் மயில்களாகிய விரும்பத்தக்க அழகமைந்த கூட்டம் பொருந்தப்பெற்று; என்று சோலையை விசேடித்து, அது. (அச்சோலை),
தெரிவு அருமை காதலில் சேர்ந்தோர் - பிறர்க்கு இன்னி தன்மைத்தென்று புலன் ஆகாத மனமொத்த காதலோடு புணர்ந்த தலைவன்றலைவியர், விழையும் பரிசு கொண்டு விரும் புந் தன்மையை மேற்கொண்டு, வரி அளி பாட மருவரும் வல்லி இடையுடைய - வரிப்பாடல்களைப் பாடும் வண்டுகள் ஒலிக்கும் பொருந்துதற்கரிய பூங்கொடி போன்ற இடையினையுடைய, திரிதரும் காமர் மயில் இயல் ஆயம் நண்ணாத் தேன் மொழி அரிவை தன் நேர் எனலாகும் - சோலையிற்றிரியும் விரும்பத் தக்க மயில் போன்ற சாயலையுடையளாய்த் தனது பாங்கியர் கூட்டத்தைச் சேராது தனிப்புட்ட இனிய மொழியினையுடைய பெண்ணாகிய தலைவிக்குச் சமானமாக விளங்கும் (எ . று). இச்செய்யுளிலுள்ள சிலேடையை அங்கமாகப்பெற்ற ஒப் பணியின் நயத்தை உய்த்துணர்க. -