பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - விருச்சிக பந்தம் 571

மேற்கண்ட கட்டளைக் கலித்துறை,

தெரிவருங் காதலிற் சேர்ந்தோர் விழையும்

பரிசு கொண்டு வரியளி பாட . . . மருவரு வல்லியிடை யுடைத்தாய்த் திரிதருங் காமர் மயிலிய வாய நண்ணுத் - தேமொழி யரிவைதன் னேரென லாகுமெம் மைய யாமா டிடமே.” (௪௫)

என ஒரு நேரிசையாசிரியப்பாவாகக் கொள்ளப்படுமாறும் உணர்க.

22. விருச்சிக பந்தம்

தேளின் உருவம் போலமைத்த சித்திரத்தில் முன் புறத்தி உள்ள இடுக்கிகள் ஒவ்வொன்றிலும் நகன்நான்கெழுத்துக்களும், தலையிலொன்றும் முதுகில் நான்குமாக ஐந்தெழுத்துக்களும், ஒரு பக்கத்திற்கு நான்கு கால்களாக இரு பக்கத்திலுமுள்ள எட்டுக் கால்களுக்கும் எட்டெழுத்துக்களும், மணியொன்றனுக்கு ஓரெ ழுத்தாகக் கொடுக்கிலுள்ள ஆறு மணிகளிலும் ஆறெழுத்துக் களும் அமைய, வலப்புற இடுக்கியில் ஏறியிறங்குமாறு எழுத் துக்கள் மாலை மாற்றாகப் பொருந்தப் பாடுஞ்செய்யுள் விருச்சிக பந்தமாம். விருச்சிகம் - தேள். -

இதற்கு உதாரணம் :

1.திங்கண்முக மானேதே னேமாகச் செங்கமல மங்கைதிற நின்வாய் மலர் (௪௬)

இதன் பொருள் :-திங்கள் முகம் மானே - சந்திரன் போன்ற முகத்தையுடைய மான் போன்றவளே! தேனே - தேன்போலினிப்பவளே! மாகம் செம்மை கமலம் மங்கை திற நின் வாய் மலர்-விண்ணிலுள்ள சிவந்த தாமரை மலர்மே லுறையும் மங்கையாகிய திரும்கள் போன்றவளே ! நீ நினது ம்லர் போன்ற வாய் மலர்ந்தருள்வாய் (பேசுவாய்).(எ .று ) இக்கலாவதி நாடகச் செய்யுளில், கமானே தேனேமாக என்ற பகுதி மாலை மாற்றாய் அமைந்து வலப்புற இடுக்கியில் ஏறியிறங்குவது காண்க. -

  • கலாவதி பக்கம், 148 பாட்டு, 215.