பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய இரண்டாம்

2.

"சேம னன்பர் சேவிகவி சேர்புலவ ராராயு மாமதமன் னைப்பணிகு வாம்." (௪௭)

இதன் பொருள்:-

சேமன் அன்பர் சேவி - இடப் வாக னத்தையுடைய தலைவனாகிய சிவபெருமானது பக்தர்கள் வணங்கும்; கவி சேர் புலவர் ஆராயும் - பொருள் பொதிந்த சொற்களால் செய்யுட்களைச் செய்யும் புலவர்களால் ஆராயப்பட்ட; மா மதம் மன்னைப் பணிகுவாம் -பெருமை வாய்ந்த மத ஜலத்தைச் சொரியும் யானை முகத்தையுடைய விநாயக மூர்த்தியை வணங்குவாம் (எ - று)