பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) சதுரங்க துரக கதி பந்தம் 573

இவ்விநாயக வணக்கமாகிய குறள் வெண்பாவில், 'ர் சேவிகவிசேர் என்ற பகுதி மாலை மாற்றாய் வலப்புற இடுக் கியில் ஏறியிறங்குவதோடு, இச்செய்யுளையியற்றிய ஆசிரியனது இயற்பெயர் விருச்சிக சித்திரத்தின் உடலில் (தலையிலும் முதுகி லும்) அமைந்து கிடப்பது உணரத்தக்கது.

3."வருதியோ வவியா

தருதயா விமலன் 
பரிதிமால் பதமே 
கருதநீ மனமே. ”

இதன் பொருள் :-மனமே - நெஞ்சமே அவியா தரு தயா விமலன் - அழியாத செல்வமாகிய கல்வியை மாணாக்கர்க்கு அருள் செய்து போதிக்கும் கருணா மூர்த்தியும் பரிசுத்தனுமாகிய; பரிதி மால் பதமே - சூரியநாராயணன் என்னும் இயற்பெயர் வாய்ந்த ஆசிரியனது பாதங்களையே, கருத - தியானித்து வணங்க, நீ வருதியோ - நீ வருவாயோ? (எ . று)

பரிதி - சூரியன்; மால் - நாராயணன். பரிதி மால்' - சூரிய நாராயணன் என்ற இயற்பெயரின் பொருளைத் தரும் புனைவுப் பெயர். இச்செய்யுள், விற்பூட்டு. அவியா, வினையாலணையும் பெயர். ஆசிரிய வணக்கமாகிய இக்கவியில் வியாதருதயாவி' என்ற பகுதி, மாலை மாற்றாய் வல இடுக்கியில் ஏறியிறங்குவது காண்க.

23. சதுரங்க துரக கதி பந்தம்

பக்கத்திற்கு எட்டுக் கட்டங்களமைந்து அறுபத்து நான்கு கட்டங்களடங்கிய சதுரங்க சித்திரத்தில், ஒரு கட்டத்தினின்று புறப்பட்ட குதிரை ஒன்று குதித்த இடத்தில் மீளவுங் குதிக் காமல் அறுபத்து நான்கு கட்டங்களிலும் ஒன்றும் விடாமற் செல்லுங்கால் செய்யுளிலுள்ள வரிசைப்படி எழுத்துக்களைக் கட்டத்திற்கு ஓரெழுத்தாக அமையுமாறும், நேர் வரிசையிலோ கோணாந்த்ரங்களிலோ, அன்றி வேறு விதமாகவோ இஷ்டமான பெயர்களும் சொற்றொடர்களும் புலப்படப் பொருந்துமாறும்

|புலவனியற்றும், கவி சதுரங்க துரக கதி பந்தமாம். துரகம் -குதிரை;

கதி நடை, -