உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சித்திர கவி விளக்கம்

     1. சித்திர கவி 

கோமூத் திரியே கூட சதுர்த்தம் மாலை மாற்றே யெழுத்து வருத்தனம்

நாக பந்தம் வினாவுத் தரமே காதை கரப்பே கரந்துறைச் செய்யுள்

சக்கிரஞ் சுழிகுளஞ் சருப்பதோ பத்திரம் அக்காச் சுதகமு மவற்றின் பால்.

இச்சூத்திரம் சித்திர கவிகளின் வகை உணர்த்துவது. இதன் பொருள் :-கோமூத்திரி, கூட சதுர்த்தம், மாலை மாற்று, எழுத்து வருத்தனம், நாக பந்தம், வினாவுத்தரம், காதை காப்பு, கரந்துறைச் செய்யுள், சுக்கிர பந்தம், சுழி குளம், சருப்பதோபத்திரம், அக்கரச் சுதகம் என்னுமிவை மேற்கூறி வந்த சொல்லணியின்பாற்படும்

(எ - று.) - அக்கரச் சுதகமும் என்பதன்கணுள்ள எச்ச உம்மையால், நிரோட்டகம், ஒற்றுப்பெயர்த்தல், மாத்திரைச் சுருக்கம், மாத் திரை வருத்தனை, முரச பந்தம், திரிபாகி, திரிபங்கி, பிறிதுபடு பாட்டு, விருச்சிக பந்தம், வில்வ தள பந்தம், இரத பந்தம், சதுரங்க துரக கதி பந்தம், கடக பந்தம், சிவலிங்க பந்தம் முதலி யனவும் இச்சித்திர கவி வகையிற் கொள்ளப்படும்.

2. கோமூத்திரி, பசு மாடு நடந்துகொண்டே மூத்திரம் பெய்யர் உண்டாகும் சுவட்டின் வடிவாக அமைக்கப்பட்ட ரேகையிலே எழுத்துக்கள் அமையப் பாடிய பாட்டு கோமூத்திரியாகும் (கோ - பசு, மூத்திரி. மூத்திர வடிவுடையது)

இதற்கு உதாரணச் செய்யுள்:

"பருவ மாகவி,தேர்சுன மாலையே,

பொருவி லாவுழை மேவன கானமே

மருவு மாசைவி டாகன மாலையே 

வெருவ லாயிழை பூவணி காலமே "(க)