உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய இரண்டாம்

இதன் பொருள் :-இது ஒ பருவம் ஆக - இதுவோ தலைவர் குறித்த கார்ப்பருவமாதல் வேண்டும்; கனம் மாலை - மேக வரி சைகள், ஆசை மருவும் - திக்குக்களிலே பொருந்தும்; (அது வேயுமன்றி), விடா கன மாலையே - (கனம் மாலை விடா) அதிக மாக மாலைப்பொழுதிலே மழை பொழிதலை நீங்கா (எனவே, மிகவும் பொழியும்); பொருவு இலா உழை - நிகரற்ற மான்கள், கானமே மேவன - காட்டின்கண்ணே விரும்பி விளையாடுவன


கோமுத்திரி


ஆயின; (ஆதலால்) ஆயிழை - குற்றமற்ற அணிகளையுடையாய், வெருவல் - அஞ்சாதொழிவாயாக, பூ அணி காலமே - தலைவர் விரைவில் இங்கு வந்து நம்மைப் பூக்களால் அலங்கரிக்கும் காலம் இதுவே (எ - று.) -

மேவன விரும்புவன. ஒப்: மேவன செய்யும் புதல்வன் றாய்க்கே.” (குறுந். 8). இது பருவங்கண்டு வருந்திய தலைவியைப் பாங்கி தேற்றியது. -


3. கூட சதுர்த்தம்

நான்காமடியிலுள்ள எழுத்துக்கள் மற்றைய மூன்றடிக ளுள்ளும் மறைந்து நிற்குமாறு இயற்றப்படும் செய்யுள் கூட சதுர்த்தமாகும்.

கூடம் - மறைவு, சதுர்த்தம் - நான்காவது. மறைவாகிய நான்காமடியை உடையதென்பது பொருள். இதற்கு உதா ரணச் செய்யுள்:- 1ல்:

புகைத்தகைச் சொற்படைக் கைக்கதக்

கட்பிறைப் பற்கறுத்த

பகைத்திறச் சொற்கெடச் செற்றகச்

சிப்பதித் துர்க்கை பொற்புத்

தகைத்ததித் தித்ததுத் தத்தசொற்.

றத்தைப்பத் தித்திறத்தே

திகைத்தசித் தத்தைத் துடைத்தபிற்.

பற்றுக்கெடக்கற்பதே: (௨)