பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

அவர்களுடைய நாடு வளப்பட்டு அதன் செல்வங்கள் வளர்ச்சியடைகின்றன.

தங்கள் திறமையைப் பயன்படுத்தி அரசர் ஆனவர்கள். தங்கள் ராஜ்யங்களை அடையும்போது தான் கஷ்டப்படுகிறார்களே தவிர, அவற்றை எளிதாக நிலைப்படுத்திக் கொள்கிறார்கள். தங்கள் ராஜ்யங்களைத் தேடிக் கொள்கின்ற காலத்தில் அவர்கள் அடையும் கஷ்டங்களும், அவர்கள் தங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நுழைக்கின்ற புதிய சட்ட திட்டங்களில் இருந்து ஓரளவு உண்டாகின்றன. புதிய நடை முறைகளைப் புகுத்தி நடைபெறச் செய்வதைப் போல் அதிகமான கஷ்டமோ, அதன் வெற்றியில் ஏற்படுகின்றதைப் போல் அதிகமான சந்தேகமோ, அல்லது அதைக் கடைப்பிடிப்பதைப் போல் அதிகமான ஆபத்தோ வேறு எதுவும் இல்லை என்பதை அறியவேண்டும். பழைய நடைமுறையால் பயனடைந்த எல்லோரும் சீர்திருத்தக்காரனுக்கு எதிரிகளாகி விடுவார்கள். புது நடை முறையால் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்ற எதிராளியின் கையில் இருக்கின்ற சட்டத்திற்கு அஞ்சுகின்ற மனிதத் தன்மையில் நம்பிக்கையில்லாத அசமந்தப் பேர்வழிகள்தான். இந்தப் புதுச் சட்டங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடியவர்கள். இவர்களுக்கும் புதுமையில் அதை அனுபவத்தில் காணும்வரை உண்மையில் எவ்விதமான நம்பிக்கையும் இருப்பதில்லை. எதிர்ப்பவர்கள் வேகமாக எதிர்க்கவும், ஆதரிப்பவர்கள் அரைகுறை மனத்தோடு ஆதரிக்கவும் இதற்கிடையிலே சீர்திருத்தம் புகுத்துகின்றவன் அடைகின்ற ஆபத்து மிகப் பெரிது. புதுமையைப் புகுத்துகின்றவர்கள் தன்னந்தனியாகவோ அல்லது பிறருதவியைக் கொண்டு கட்டாயப்படுத்தும் முறையில் செயலாற்றுகிறார்களா என்பதைப் பொறுத்திருக்கிறது. அவர்களுடைய வெற்றி தோல்வி தன்னந்தனியாக அவர்கள் முயற்சி செய்வதாயிருந்தால் அவர்கள் வெற்றி மோசமாகத்தானிருக்கும்.

தங்கள் சொந்த பலத்தையும் படைபலத்தையும் உபயோகப்படுத்தக் கூடுமானால் அவர்கள் அந்த விஷயத்தில் தோல்வியடைவது அபூர்வம். இதனால்தான் படைபலம் படைத்த தீர்க்கதரிசிகள் எல்லோரும் வெற்றியடைந்து இருப்பதையும், படை பலமற்றவர்கள் தோல்வியடைந்து இருப்பதையும், நாம் காணுகிறோம். மக்களை ஒரு